உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 29

782 25 0
                                    


29

'ஏய் அங்கே வைக்காதே...இப்படி கொண்டா...இப்படி வாங்கடா..' வந்ததும் வராததுமாக விசாலாட்சியின் குரல் அதிகாரத்தை காட்டியது. '

கண்ணா! ராஜா..! எப்படிடா இருக்கே..?' பேரனைக்கண்டதும் கட்டித்தழுவினாள்.

'நல்லா இருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க பாட்டிமா..?'

'நான் நல்லாத்தான் இருக்கேன் நீ ஏம்பா இளைச்சுட்டே?'

'போங்க பாட்டி! உஙக் பக்கத்தில் யார் நின்றாலும் இளைச்ச மாதிரித்தான் தெரிவாங்க..' அவன் சிரித்தான்.

'அப்படியே தாத்தாவோட குறும்பு..' அவனது கன்னத்தை கிள்ளிவிட்டு மகன் பக்கம் திரும்பினாள்.

'நீ எப்படி இருக்கேப்பா?'

'நல்லா இருக்கேன்மா....நீங்க எப்படி கால் சுகமா?'

'ம் ஆச்சு...ஆமா இது யாரு..? புதுசா இருக்கு' தள்ளி நின்ற மாதங்கியை பார்த்து கேட்டாள்.

'இ..இதுதான் நம்ம மாதங்கி..' ரகுராமன் எச்சிலை விழுங்கியபடி சொன்னார்.

'மாதங்கியா இது? நான் என்னமோ நம்ம சாதிப்பொண்ணுதான் ஒண்ணு நிற்குதோன்னு நினைச்சுட்டேன்..ம்..நல்ல கூத்துதான் நடந்திருக்குது நான் வந்துட்டேன் இல்லே கவனிச்சுக்குறேன்...' அவள் மாதங்கியை பார்த்து சொல்ல மாதங்கியின் முகம் பேயறைந்தது போலானது. ரகுராமனும், லக்ஷ்மியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். ரோஹித்தின் விழிகள் மாதங்கியின் முகத்தை பார்த்தது.

'ஏன் இந்த பாட்டி அடுத்தவங்க மனசை நோகடிக்குது..' யோசித்த வண்ணம் மாதங்கியை பார்த்தான். அவள் நிமிர்ந்தும் பாராமல் தன்னறைக்கு வந்து தாழிட்டாள்.

'சற்று முன்பு தன்கூட கலகலப்பாக பேசிய மாதங்கியோட முகம் தானா இது?' என எண்ணினான்.

'லக்ஷ்மி என்ன தூங்கலையா?'
எதையோ யோசித்தபடி படுத்திருந்த மனைவியைப் பார்த்துக் கேட்டார் ரகுராமன்.

'எப்படிங்க தூக்கம் வரும்..?.எனக்கு உங்கம்மாவை நினைச்சா பயம்மாக இருக்குங்க...'

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now