உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா -35

795 29 0
                                    

35
விசாலாட்சி தன் அறையில் இருப்புக்கொள்ளாமல் தவித்தாள். சினிமா படத்தில் வருவது போல சேலைத்தலைப்பை முடிவதும், அவிழ்ப்பதுமாக இருந்தாள். முகம் தீவிரமாக எதையோ யோசித்துக்கொண்டிருந்தது.

கடைசியில் ஒரு முடிச்சு போட்டாள் அது இறுகியது. அவிழ்க்க முடியாமல் போன போது அவள் முகம் பிரகாசம் அடைந்தது. உதடு "மாட்டிகிட்டே" என முணுமுணுத்தது.

ரோஹித் இன்டெர்நெட் மூலம் ஆக்ராவுக்கு பிளைட் டிக்டெட் புக் செய்தான். உடனேயே டிக்கெட் மெயிலில் வந்தது. பிரிண்ட் அவுட் செய்து கொண்டான்.

'ரோஹி....என்ன இன்னுமா கிளம்பலை...?' வர்ஷா அவனை முறைத்தவாறு தனது பேக்கை தூக்கினாள்.

'வர்ஷா குளிர் அதிகம்..ஸ்வெட்டரை எடுத்துக்கோ..' என்று கூறியவாறு விசாலாட்சி வந்தார்.

'சரி...'

'கண்டதை சாப்பிடக்கூடாது..'

'சரி..'

'போனோமா...சுத்தி பார்த்தோமா..என்று திரும்பிடணும்...'

'பின்னே அப்படியே ஓடிடப்போறாமா..?'
குதர்க்கமாக கேட்டாள் வர்ஷா.

'குறுக்கே பேசாதே...! ரோஹித்துக்கு குளிர்னா தொண்டை கட்டிடும்...அவனுக்கு மாத்திரை வைச்சுருக்கேன்...'

ஒவ்வொன்றையும் சொல்லியபடி வந்தவரை முறைத்தபடி பார்த்து,

'சரி..' என்றாள்.

'அப்புறம் அமெரிக்கா ரோட்லே ஓடிப்பிடித்து விளையாடுவது போல வேண்டாம் இங்கே..'

'சரி...'

'என்ன சரி சரின்னுகிட்டு...சொன்னது நல்லா மூளையில் ஏறிச்சா..?'

'சரின்னு சொல்லாம வேறு என்னெண்ணு சொல்றது..பிக்மா...நாங்க ஒண்ணும் சின்ன பிள்ளைங்க இல்லை...நீ இப்படி பேசி பேசியே எனக்கு வெறுப்பேத்தாதே..! ரோஹி வா போகலாம்..' என மணிக்கட்டை பார்த்தாள்.

விசாலாட்சி ரோஹித்தின பேக்கை காரில் வைப்பதற்கு எடுத்து கொண்டாள். ரோஹித்தின் கண்கள் மாதங்கியை தேடியது. அவளது ஸ்கூட்டி இருக்கும் இடத்தில் அது இல்லை. அவள் சீக்கிரமாகவே கிளம்பிவிட்டாள் என்று சொல்லியது.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now