உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 26

799 28 0
                                    

26
மாதங்கி லீவு நாளில் ரகுராமன் லக்ஷ்மியோடு சேர்ந்து சிறு குழந்தை போல மாறிவிடுவாள். ரகுராமனும் ஜாக்கிங், டென்னிஸ், என்று அவளை கூட்டிப்போவார். இருவரும் கிளப்பில் விளையாடிவிட்டு போதாது என்று வீட்டிலும் வந்து செஸ், கேரம் என்று ஆடுவார்கள். லக்ஷ்மி கொறிக்க என்று பலவிதமானது செய்து வைப்பாள். மூவரும் சேர்ந்து கொள்ள அந்த சனி ஞாயிறு இன்பமாக கழியும்.

ரோஹித் வந்தபின் அவளுக்கு அது கரி நாளாக தோன்றியது. ஆனால் இன்று அவளுக்கு பழையபடி குதூகலம் வந்து புகுந்து கொண்டது. லக்ஷ்மியுடன் சேர்ந்துகொண்டு பணியாராம் செய்யத் தொடங்கிவிட்டிருந்தாள்.

ரோஹித் தனது மினி கம்பியூட்டரை தூக்கிவைத்துக்கொண்டு தனது அறைக்கு வெளியே உள்ள ஹாலில் இருந்து நண்பனுடன் சாட் செய்து கொண்டிருந்தான்.

ரகுராமன் பூக்களின் செடிகளை வெட்டி ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார். வெளியே குரல்கள் வர எட்டிப்பார்த்தார். வயோதிப மாதுடன் ஒரு இளைஞன் வந்து கொண்டிருந்தான்.

'வணக்கம் என்பேரு பத்மாவதி...இது என்னோட பையன் நரேந்திரன் டி.டி.எஸ் கம்பெனி மேனேஜராக இருக்கான்..'

'வணக்கம்மா...உட்காருங்க...லக்ஷமி காபி பலகாரம் எடுத்துகிட்டு வாம்மா...' என்று உள்ளே பார்த்து குரல் கொடுத்துவிட்டு,

'ம்.. என் வீடு தேடி வந்திருக்கீங்க என்ன விசயம் என்று தெரிஞ்சுக்கலாமா?'
என்றார் ரகுராமன்.

'நான் சுத்தி வளைச்சுப்பேசலை...நேரடியாகவே விஷயத்துக்கு வர்றேன்.. எனக்கிருப்பது ஒரே மகன். அவனும் கைநிறைய சம்பாதிக்கின்றான்... எந்தக் குறையுமில்லை..அவனை பத்தி எங்க வேணா விசாரிச்சு பாருங்க..என் மகனுக்கு மாதங்கியை பொண்ணுகேட்டு வந்திருக்கேன்..' அவள் சொல்ல ரகுராமன் முகம் குழப்பத்துக்கு போனது.

'மாதங்கியை பத்தி இவன் சொன்னதை வைச்சே இவ தான் என் மருமகள்னு முடிவு பண்ணிட்டேன்...நீங்க சம்திச்சா ஆண்டவன் திருவருளால்..' அவளை தடுத்தவராய்,

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now