உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா -31

784 25 0
                                    


31

கண்கள் குளமாகி இருந்தன குனிந்த தலை நிமிராமல் தன் அறைககு வந்து புகுந்து கொண்டாள். இருக்கையில் அமர்ந்தவளுக்கு விசாலாட்சியின் பேச்சே காதுகளில் சுத்தியடித்தது.

'இடது காதால் கேட்டு வலது காதால் விட்டுடு..மாதங்கி..!' ரோஹித்தின் குரல். சட்டென்று நிமிர்ந்தாள். எதிரே வெறுமையாக இருந்தது. 'அவனது குரல் கேட்டதே..ஓ..' நொந்தபடி தீவிரமாக யோசித்தாள்.

'இனியும் இந்த வீட்டிலே என்னால் இருக்க முடியுமா? முடியாது என்றால் எங்கே போக..? ஹாஸ்டல்தான்..அத்தை மாமா விடுவாங்களா? வெளியில் வேலை தேடுவது குதிரைக்கொம்பாக இருக்குதே..வேண்டாம் படிச்ச படிப்புக்கு தகுந்த வேலையை விட ஏதாவது ஒரு வேலை தேடிக்கொள்ளனும்..அந்த வீட்டை விட்டு சீக்கிரமாக போயிடணும்..அத்தை மாமா சொன்னா புரிஞ்சுப்பாங்க..என்னால அவங்களுக்கு எந்நேரமும் கவலை தான்..ரோ...ரோஹித்? அ...அவன்கிட்டே நான் போறேன்னு சொன்னா அவனோட ரியாக்ஷன்? ம்..எப்படி இருக்கும் மிகவும் சந்தோஷப்படுவான்.. ஆரம்பத்திலிருந்தே போ போ என்று விரட்டுபனாச்சே.. அதுதான் அவனுக்கும் நிம்மதி... என்னால் தான் எத்தனை பிரச்சனை.?' யோசித்து யோசித்து தீவிரமான ஒரு முடிவுக்கு வந்தாள். வேலையில் கவனம் செலுத்த முயன்றாள். மேனேஜர் வந்து எம்டி எங்கே சைன் வேணும் என்றார். மாதங்கி தெரியாது என்றுவிட அதுக்கு மேல் துருவிக்கேட்காமல் அவர் போனார்.

'எம்டி எங்கேன்னு என்கிட்டே கேட்டுகிட்டு..நாந்தான் அவரை முந்தானையில் முடிஞ்சு வைச்சிருக்குறேன்..? ஃபைல்கள் எல்லாம் நிரம்பி வழியுது..இதெல்லாத்தையும்; வீட்டுக்கு எடுத்துட்டு வா! என்று எனக்கு கட்டளை போட்டுட்டு. துரைக்கு..அப்படியே பாட்டியின் அதிகார குணம்..எந்த ஹோட்டல்லே அவளோடு கொட்டமடிக்கிறாரோ..' யார் மேலே இருந்த கோபமோ தெரியவில்லை திட்டித்தீர்த்தாள்.

'ஹேய் ரோஹி...உண்மையைச்சொல்லு...இன்னிக்கு காலையில் ஏன் அப்படி என்கூட உரசிகிட்டு நின்னே?' ஃபைவ்ஸ்டார் ஓட்டல் வர்ஷாவும் ரோஹித்தும் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Donde viven las historias. Descúbrelo ahora