உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 23

822 25 0
                                    


23

காலையில் எழுந்து ஜாக்கிங் போய்விட்டு குளித்துமுடித்து அவசரமாக ஃபைல்களை சரி பார்த்தபடி காரில் ஏறப்போனான். மாதங்கியும் வீட்டில் இன்றும் இருக்க முடியாது என்று கம்பெனிக்கு கிளம்பியவாறு வெளியே வந்தாள்.

'ரோஹித்! மாதங்கியையும் அழைச்சுட்டு போப்பா..' ரகுராமன்
'அவ ஸ்கூட்டியிலே வரட்டுமே..நான் கிளம்புறேன்...'என கார் கதவை திறந்தான்.

'ஸ்கூட்டி வரலேட்டாகும்னு ஃபோன் செய்தாங்க...உன் கூட வரட்டுமே...நீ போம்மா..' என்றார் தந்தை.

'ஒண்ணுக்கு மூணு கார் இருக்கு அதில் வரச்சொல்லுங்க.'

'என்னப்பா நீ? நீங்க ரெண்டு பேரும் ஆபிசுக்குத்தானே போறீங்க..நேற்று நடந்ததுக்கு அப்புறமும் அவளை தனியா அனுப்ப எனக்கு பயம்மாக இருக்கு...நீ கூட்டிப்போய் அழைச்சுட்டு வா....நீ போம்மா' என்றபடி வந்தாள் தாய். மாதங்கி அவனருகில் வந்து நின்றாள். அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு


'நீ அந்த கார்லே வா..! எதுக்கு சொல்றேன்னு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்..' அவன் கூற அவள் நிமிர்ந்து பார்த்தாள்.

'இல்லை என் கூட கார்லே வந்தா உன் கற்பு போயிடும்னு நான் யோசிக்குறேன்...நீ எப்படி? தைரியம் இருந்தா என் காரில் ஏறலாம்..' என்றுவிட்டு ஒரு பார்வை பார்த்தான். அவளும் ஒரு பார்வை பார்த்துவிட்டு முன்பக்க கதவை திறந்து ஏறி அமர்ந்தாள். ரோஹித் தோள்களை குலுக்கிவிட்டு காரை எடுத்தான். கொஞ்ச தூரம் போயிருக்கும்

'பரவாயில்லையே! ரொம்பவும் தைரியமாகத்தான் இருக்கே..! இல்லைன்னா ஏதாவது கத்தி, கித்தி இடுப்பில் செருகி வைச்சிருக்கியா? நீயா வந்து புலி வலையில் விழுந்த மாதிரி தோணலை உனக்கு?'
நக்கலாக கேட்டான்.

மாதங்கி எதுவும் பேசாது அமைதியாக அவனைத் திரும்பி பார்த்தாள்'

'இல்லை..! எப்பவும் ஏடா கூடமாத்தானே தோன்றும்' என்றான். அவள் மௌனமாகவே இருந்தாள். அவனே தொடர்ந்தான்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now