உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா -39

796 29 0
                                    

39
ரகுராமன் மகன் வந்ததும் லக்ஷ்மியிடம் சொல்லிவிட்டு கிளம்பி போனார். அவரது கார் அடையாறு பெட்ரோல் பங்க்கில் வந்து நின்றது. விரல்களால் லீட்டரை காட்டிவிட்டு நிரம்பியதும் கிரடிட் காட்டை எடுத்து பில்லை கட்டிவிட்டுகாரை ஸ்ராட் செய்தார்.

பின்னால் இருந்து ஒரு கார் இடித்ததில் இவரது பின் கார் நொறுங்கியது கேட்டது.

'இடியட் எவண்டா..அவன்?' காரை விட்டு இறங்கி அவசரமாக ஓடிவந்தார்.

'ஸாரி சார்...சட்டென்று பிரேக் போட முடியலை..' என்றவாறு இறங்கினார் டி.டி.எஸ் கம்பெனி எம்.டி. அவரை பார்த்த ரகுராமன்,

'ஏய்...நீ...நீ....தீ..தீனா..தீனதயாளன்தானே?'
என்றார் திகைப்புடன்.

'ர..ரகு...நாந்தாண்டா...'என்றார் ஆச்சர்யத்துடன் தீனதயாளன்.

அவ்வளவு தான் அவரது சட்டையை எட்டி கொத்தாக பிடித்தார்.

'துரோகி...நீ உயிரோடு தான் உலாவுறியா?' கேட்டபடி அவரது கன்னத்தில் ஒரு போடு போட்டார்.

'ரகு...! பொறுமையா நான் சொல்றதை கேளு...' அவர் சுற்றி பார்த்தபடி கெஞ்சினார். ரகுராமன் எதுவும் கேட்கும் நிலையில் இல்லை. அவர் கோபத்தின் உச்சியில் இருந்தபடி கத்தினார். போற வருகிறவர்கள் கூடிவிட்டனர்.

'ரகு...வா...உனக்கு எல்லாம் சொல்றேன்...' என்று அவரை இழுத்து காருக்குள் திணித்தவராய் வேகமாக ஓட்டி வந்து ஒதுக்கு புறமாக நிறுத்தினார்.

'ரகு தயவுசெய்து நான் சொல்வதை காது கொடுத்து கேளுப்பா...அதுக்கப்புறம் நீ என்னைக் கொன்றாலும் எனக்கு கவலை இல்லை..' என்றவாறு அவரது காலை பிடித்துக்கொண்டார்.

'என்னத்தை கேட்குறது? அப்பாவிப்பொண்ணை ஏமாத்திட்டு போனதுக்கு..உன் துரோக செயலுக்கு விளக்கம் கொடுத்து நீ நல்லவன் என்று நம்ப வைக்கப்போறியா?' என்றார் ரகுராமன் வெறுப்போடு.

'இல்லைப்பா..நிச்சயமா இல்லை...நான் எத்தனை புண்ணியம் செய்தாலும் நான் செய்த பாவத்துக்கு ஈடாகாது...தூக்கு தண்டனை கைதிக்கு கூட அவனது கடைசி ஆசையை சொல்ல ஒரு சந்தர்ப்பம் கொடுப்பாங்க...அது போல உன்கிட்டே கேட்கிறேன்..என் நிலையை சொல்ல ஒரு சந்தர்ப்பம் தா..' அவர் கெஞ்ச கொஞ்சம் கோபம தணிய 'பேசு' என்றார்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now