உருகாதோ எந்தன் உள்ளம் ...! எஸ்.ஜோவிதா - 8

924 24 0
                                    

8
'என்னம்மா இது என்னைப்போய் வாங்க போங்கன்னு சொல்லிகிட்டு...வசந்த்....நல்லா புகழுறார்...'

'உங்..உன்னை பார்த்தில் எனக்கு ரொம்ப சந்தோஷம்மா...உன்னைப்பத்தி அடிக்கடி சொல்லுவான்...நேரே பார்க்கும் போது சரியாத்தான் இருக்கு...' அதன் பின் கற்பகம் கேட்டுக்கொண்டதுக்கு இணங்க காயம் ஆறும் வரை போய் பார்த்துவிட்டு வந்தாள்.

'நீ வந்தால் தான் எனக்கு வியாதியே குணமானது போல இருக்கு...'மாதங்கியின் கைகளை பற்றியபடி சொல்லிக்கொண்டிருந்தாள் கற்பகம்.

மூன்றாம் நாள் கற்பகம் டிஸ்சார்ஜ்  ஆகும் நாள். "வேலை முடிந்ததும் வீட்டுக்கு போய் என்னத்தை வெட்டிமுறிக்க போறேன்?" என எண்ணியவளாய் அன்று கற்பகம் வீட்டுக்கு போகும் வரை கூடவே இருந்தாள். கற்பகம் வாரத்தில் ஒருதடவையாவது மாதங்கி தன்வீட்டுக்கு வந்து போகணும் என்று அடம்பிடித்தாள். வசந்திற்கு தாயாரின் நடவடிக்கையால் சங்கடமாக இருந்தது. தனக்கு சம்பளம் கொடுக்கும் முதலாளி தன் வீட்டுக்கு அடிக்கடி அம்மா வரச்சொல்வது நல்லது அல்ல. ஏதோ ஒரு உதவி செய்ததுக்கு இப்படி நடந்து கொள்வது முறையல்ல என்று தாயாரிடம் முணுமுணுத்து விட்டு மாதங்கியிடம் மன்னிப்பு கேட்டான். மாதங்கி சிரித்தவாறே,

'உங்கம்மாவை பார்ப்பதால் என் ஜீ.எம் பதவியோ நானோ குறைஞ்சுடமாட்டோம்....நீங்களும் வேலை செய்யுறீங்க சம்பளம் வாங்குறீங்க..நானும் வேலை செய்றேன் சம்பளம் வாங்குறேன்..ஆக நாம ரெண்டு பேரும் ஒரே ஜாதி! அதுதான் தொழிலாளிங்க..என்னை ஒரு பிரண்டா நினைச்சுக்கோங்க.. அதைவிட்டு என்னைக்கண்டா சங்கடப்படுவதும் பயப்படுவதும்..எதுக்கு?' அவளது பேச்சில் இருந்த கனிவும், உண்மையும் அவர்களது நெஞ்சை தொட்டன. அதன் பின் அவனும் சகஜமாக பழக முற்பட்டான்.

மாதங்கியை பொறுத்த வரையில் தோழிகள் என்று யாரும் கிடையாது காலேஜ் படித்ததே ராயல் ஃபாமிலி பிள்ளைகள் படிக்கும் காலேஜ்ஜில். அங்கு வரும் பணக்கார பிள்ளைகளை கண்டாலே இவள் ஒதுங்குவாள். யாருடனும் சினேகம் வைத்துக்கொள்ள அவள் விரும்பவும் இல்லை கவலைப்படவும் இல்லை. காலேஜ் முடிந்து அவளுக்கு தோழர்கள் தோழிகள் எல்லாம் கம்பெனியில் வேலைபார்ப்பவர்களும் வீட்டில் இருப்பவர்களும் தான். அதன் காரணமாகவோ என்னவோ அவள் தன்னைப்போல் உள்ளவர்களிடம் சட்டென்று ஒட்டுபவளாக இருந்தாள்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now