உருகாதோ எந்தன் உள்ளம் ...! எஸ்.ஜோவிதா - 5

909 23 0
                                    

5
மாதங்கி சீக்கிரமாகவே எழுந்து ஸ்கூலுக்கு கிளம்பிவிட்டிருந்தாள் ரோஹித்தின் கண்ணில் படாமல் அவள் தயங்கி , தயங்கி போவதை பார்த்த ஜானகி கவலை படர மகளை பார்த்தாள்.

'ஏய் என்ன எட்டு மணியானால் டிபன் மேசைக்கு வரணும்னு தெரியாதா?' டைனிங் டேபிளில் இருந்த விசாலாட்சியின் குரல் சமையல் அறை வரை வந்து உலுக்கியது. ஜானகியும் பாப்பம்மாளும் இட்லி, தோசை, சாம்பாரு, பொங்கலோடு வந்து வைத்தனர்.

'என்னங்கடி? எட்டு மணியானது ஞாபகம் இல்லையோ? அதுக்குத்தான் சமையல் கட்டிலேயே மணிக்கூடு மாட்டியிருக்கேனே....பார்த்துக்க வேண்டியதுதானே...ரெண்டு பொண்ணுங்களும் சேர்ந்து என்னத்தை வெட்டி முறிக்குறீங்க.? அவள் வசைபாடத்தொடங்கினாள்.

'காலையிலேயே தொடங்கிடுத்து..' என்று முணுமுணுத்தபடி மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

'என்ன பார்த்துகிட்டு...வைச்சுட்டு போங்க...' அவர்கள் மறுபேச்சு இல்லாமல் போனார்கள். உணவை எடுத்து வைத்து பேரனுக்கு ஊட்டி விடத்தொடங்கினாள். ரகுராமனுக்கு லக்ஷ்மி தட்டை எடுத்து வைத்தாள்.

'மாதங்கி...மாது....' உள்ளே எட்டிப்பார்த்து குரல் கொடுத்தார். அவள் மெல்ல தலையை நீட்டி என்ன? என்று அபிநயத்தால் கேட்டாள்.

'இங்கே வாம்மா...உனக்கு ஸ்கூலுக்கு நேரமாகலை வா வந்து சாப்புடு....' என்று அவளை அழைத்துவந்து தனது பக்கத்தில் அமர்த்தி ஊட்டிவிட்டார்.

'ச்சே கருமம்...என்னடா பண்ணிகிட்டிருக்கே...? ரகு நீ செய்வது கொஞ்சம் கூட நல்லாயில்லை..' விசாலாட்சி முகத்தை சுளித்தாள். ரோஹித்தோ அடுத்த கவளம் வாங்க மறுத்து திடும் என்று எழுந்து டைனிங் டேபிளைவிட்டு போனான்.

'அய்யோ கண்ணா! என்ன பாதியிலேயே எழுந்திட்டே? வா இன்னும் ரெண்டு வாய் சாப்புடு...' விசாலாட்சி கூப்பிட அவன் நின்று திரும்பினான் விழிகள் மாதங்கி மீதும் தந்தை மீதும் பாய்ந்தது முகம் அருவருப்புடன் சுளுக்கிவிட்டு அவன் போனான்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now