உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 9

915 31 0
                                    

9

'லக்ஷ்மி...லக்ஷ்...என்னம்மா காலண்டரையே பாத்துகிட்டு இருக்கே..? ரகுராமன் கேட்டபடி மனைவிக்கு அருகில் வந்து நின்றார்.

'என்னங்க? இன்னியோட நம்ம புள்ளையை பிரிஞ்சு 20 வருஷமாச்சுங்க..இன்னிக்கு இந்த நாள் என் வாழ்க்கையில மறக்க முடியாத நாள்...ஏன் நான் சுடுகாட்டுக்கு போனாலும் மறக்க முடியாத நாள்..'
கண் கலங்க சொன்னவளை,

'லக்ஷ்மி! என்ன பேச்சு பேசுறே? ஏதோ உளறிகிட்டு.....சீ வாயை மூடு..' அதட்டினார்.

'இல்லைங்க...என் மனம் படும் பாடு ஒவ்வொரு வருஷமும் இந்த நாள், இந்த மாதம் தேதி எனக்கு உயிர் போய் வருது....என் ரோஹித்தை என் செல்வத்தை என்கிட்டே இருந்து பிரிச்சுட்டு போன நாள் எப்படி மறப்பேன்...?'

'சரிம்மா....இந்த வருஷம் இதுக்கு முற்றுப்புள்ளி வைச்சுடுறேன்...இத்தனை வருஷமும் உன் உடம்பு கண்டிசனையும் மாதங்கியோட படிப்பையும் கம்பனி பொறுப்பையும் பாத்துகிட்டிருந்ததால என்னால அமெரிக்கா போக முடியாமல் போச்சு...இப்ப நீ தேறி வர்றே...நம்ம கம்பெனி பொறுப்புகளை மாதங்கி பாத்துப்பா.... நான் இப்பவே டிக்கெட் புக் பண்ணிட்டு வர்றேன்...' சொன்ன கணவனை கட்டியணைத்துக் கொண்டாள்.

'எ....எப்....எப்படிங்க? எ...என் புள்ளையை கூட்டிட்டு வந்துடுவீங்கதானே...என்கிட்டே கூட்டிட்டு வந்துடுவீங்கள்லே...?'
ஆவலாக கேட்டவளிடம்,

'ம்..ஆமாம்மா..அவன் வராவிட்டாலும் அடித்து இழுத்தாவது வருகிறேன்...நீ எமோசனல் ஆகக்கூடாதுன்னு டாக்டர் சொல்லியிருக்கார்... அழக்கூடாது..'
என்றார் கண்டிக்கும் குரலில்.

'நோ....! அவனை அடிக்காதீங்க...! என் புள்ளை வருவான். அவனை பத்திரமா கூட்டிட்டு வாங்க...! இந்த அம்மாவுக்காக....இதோ பாருங்க பதினெட்டு வயசுல எப்படி இருக்கான்னு பதினொரு வருஷம் கழிச்சு, கெஞ்சியதுக்கப்புறம் உங்கம்மா அனுப்பியது...அதன் பின்னாவது அவனும் தொடர்பு கொள்ளவில்லை அவங்களும் விடலை.. எப்படியாவது கூட்டிட்டு வாங்க ஒரே ஒரு தடவை பாத்துட்டு கண்ணை மூடிடுறேன்..' படபடத்தாள்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now