உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா -36

780 28 0
                                    

36
ரகுராமனிடம் ஃபைல்களை கொடுத்துவிட்டு மாதங்கி லக்ஷ்மிக்கு கேசரி கிளற உதவினாள். விசாலாட்சி யாரையோ எதிர்பார்த்து ஹாலில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

'இன்னிக்கு ஒரு மீட்டிங்கும் இல்லைப்போல...?' லக்ஷ்மி எட்டிபார்த்துவிட்டு மாதங்கியிடம் முணுமுணுத்தாள்.

'அத்தே! இன்னும் மெதுவா பேசுங்க...அவங்களுக்கு கேட்டா.. அவ்வளவுதான்... நம்ம தலைதான் உருளும்..' என்றாள் சிறிது பயந்தவாறு.

'நீ..வேற எனக்கு வர வர பயம் குறைஞ்சுகிட்டே வருது...எதுக்கும் ஒரு எல்லை இருக்கு..அது தாண்டும் வரைதான் எல்லாமுமே... தாண்டிட்டா..என்னாகும்னு தெரியாது'
என்ற அத்தையிடம் புன்னகையுடன்,

'கரெக்ட் அத்தே..!' என்றவள், திடீரென்று 'அங்கே பாருங்க, யாரோ புதுசா தெரியுது...' என்றவாறு மாதங்கி கைகள் இரண்டையும் ஃபைனாகுலர் போல பாவித்து ஜன்னல் வழியாக பார்த்தாள்.

'அப்போ இன்னிக்கு வீட்லே தான் மீட்டீங்காக்கும்..நல்ல கதைதான் போ..நாம செஞ்ச கேசரியை முழுங்க வந்துட்டாங்கன்னு சொல்லு..' லக்ஷ்மி மெதுவாக கிசுகிசுக்க ஹாலில் இருந்தபடியே விசாலாட்சி மாதங்கியை வருமாறு குரல் கொடுத்தாள்.

'அத்தே! அவங்க கூப்பிடுறாங்க...எதுக்கு?'என்றாள் பதட்டமாக,

'என்னென்னு கேட்டுட்டு வாம்மா..'

'அய்யோ! நான் மாட்டேன்..எனக்கு பய்ம்மா இருக்கு..' சின்னவள் நடுங்க,

'என்ன பயம்? என்ன செய்துடுவாங்க?..போம்மா...'
'அத்தே! நீங்களும் கூட வாங்களேன்...'

'கையில் எண்ணெய்டா...நீ போ நான் பின்னாடி வர்றேன்..'

மாதங்கி சமாதானம் ஆகாமல் மெல்ல வெளியே வந்தாள். ஒரு நடுத்தர வயதுக்காரனும், அதைவிட கொஞ்சம் கூடுதலாக இருக்கும் ஒரு பெண்மணியும் பக்கத்தில் அவள் கணவனாக இருக்க வேண்டும் மொத்தமாக மூன்று பேர் இருந்தனர். மாதங்கி அளந்து கொண்டே வந்தவள் அந்த நடுத்தர வயதுக்காரன் தன்னை விழுங்கிவிடுவது போல பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்தவள் சகிக்கமாட்டாமல் விசாலாட்சி பக்கம் பார்வையை திருப்பினாள்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें