உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 21

807 26 0
                                    


21

ரோஹித் மனம் சோர்வாக இருக்க கடற்கரைக்குப் போனான். மாலை மங்கி இருள் கவ்வத்தொடங்கியது. அந்த வேளையிலும் பீச்சில் கூட்டம் குறையவில்லை. நிலவொளியில் சிறுவர்கள் வாலிபால் விளையாடினார்கள் அவனும் தன்னையும் சேர்க்கும்படி கேட்டுக்கொண்டான். அவர்களும் படு உற்சாகமாக சேர்ந்து ஆடத்தொடங்கினர். விளையாடியதில் சோர்வும் ஓடிப்போனது. நேரமும் சேர்த்து. சிறுவர்களுக்கு கடலை, ஐஸ்கிறீம், சாக்லெட்டு என்று வாங்கி கொடுத்தான். அவர்களும் அவனுக்கு தேங்ஸ் சொல்லிவிட்டு மறுபடியும் வருமாறு கட்டளையிட்டனர். சிரித்தபடி ஏற்றுக்கொண்டவன் மணிக்கட்டை பார்த்தான். நேரம் போய்விட்டிருந்தது.

'ம்..இந்நேரம் மாதங்கி வீட்டில் இருப்பாள்....முடித்த ஃபைல்களை எடுத்துகிட்டு வந்திருப்பாளா?..அவளுக்கு இருக்குற கொழுப்பு யாருக்கு இருக்கு..? வர வர நான் எது சொன்னாலும் கேட்டுக்குறது இல்லை என்று முடிவு பண்ணிட்டாளா?' நினைவுகள் அவளையே சுற்றி வட்டமிட காரை மெயின் ரோட்டுக்கு செலுத்தினான். திருப்பத்தில் நாலைந்து பேர் ஓடிவந்து அவன் காருடன் மோதப்பார்த்தார்கள்.


'ஏய் நடு ரோட்டிலேதான் சர்க்கஸ் காட்டுவீங்களா? இடியட்ஸ்...' காரை சட்டென்று பிரேக் போட்டு நிறுத்திவிட்டு திட்டினான். அவர்கள் காதில் வாங்காமல் ஓடிப்போனார்கள்.

'ச்சே...கொஞ்சம் கூட ஒழுங்கு இல்லை..' திட்டியவன் மூளையில் அது உறைத்தது.

'என்ன அது ஒருத்தன் கழுத்தில் ஏதோ துண்டு மாதிரி இருந்திச்சு..இல்லை துணி..? துணி..மாதிரியா..? ஆமா அவனோட சால்வையாக இருக்கும்...' காரை செலுத்தினான். மறுபடியும் மூளை எச்சரித்தது நிதானித்து சிந்தித்தான்.

'நோ! அ..அது துப்பட்டா...போல பட்டால் ஆனது... துப்பட்டாவேதான்..அப்படி என்றால்..' சட்டென்று காரை அவர்கள் போன திசைக்கு திருப்பினான். கொஞ்ச தூரம் போனதும் பாதை கட்டிக்கொண்டிருக்கும் ஏதோ ஒரு பில்டிங் முன்னால் வந்து நின்றது. சுற்றும் முற்றும் பார்த்தான் வெறிச்சென்று இருந்தது.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now