உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா - 28

833 30 0
                                    


28

ஃபாக்டரியிலிருந்து அவசரம் என ஃபோன் வந்திருந்தது. மாதங்கி புரொடெக்ஷன் டிபார்ட்மெண்டில் நிமிர முடியாதளவுக்கு வேலை இருக்க, ஃபாக்டரிக்கு ரோஹித்தை போய் பார்க்குமாறு ஃபோன் செய்தாள். அவன் 'ம்..' கொட்டியதோடு கட்பண்ணியவனாக உடனேயே கிளம்பிப்போனான்.

மாதங்கி எல்லாம் சரிபார்த்து முடிந்து அப்பாடா என நிமிர்ந்தாள். அப்ப தான் அந்த ஒலி கேட்டது. ஆபத்து என அறிவுக்கும் ஒலி என்ன நிகழ்ந்தது? எங்கே? என புரியாமல் பதட்டத்தோடு மாதங்கி கேபினை விட்டு வெளியே ஓடிவந்தாள். வாட்ச்மேனிடம்,

'என்னாச்சு?'
என்றாள் பதைபதைப்போடு.

'தெரியலைங்கம்மா..ஃபாக்டரியில் ஆக்சிடெண்டு ஆச்சுதுன்னு ஃபோன் வந்துச்சு அத்தோடு கட்டாயிடுத்து..'
பவ்யமாக கூறியவரிடம்,

'ஆக்சிடெண்டா? யா....யாருக்கு?' அவசரமாகக் கேட்டாள். ரோஹித்தை ஃபாக்டரிக்கு போகச் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. பதட்டம் பன்மடங்கானது.

'தெரியலைங்கம்மா....வழக்கமாக நம்ம தொழிலாளிங்களை கொண்டு போகும் ஆஸ்பத்திரிக்குத்தான் போயிருப்பாங்க. அங்கே போனால் தெரிஞ்சுடும்...' வாட்ச்மேன் சொன்னதும் கொஞ்சமும் தாமதிக்காமல் விரைந்தாள்.

ரோஹித்தின் செல்லுக்கு தொடர்பு கொண்டு தோற்றவளாக ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தாள். பழகிய முகங்கள், பார்த்ததும் நேராக கையை காட்டின. நன்றி கூட சொல்லாமல் தலையாட்டிவிட்டு போனாள். பாதி யுனிட்டே அங்கிருந்தது.

'யா.....யாருக்கு? என்னாச்சு?' என்றாள். மூச்சு வாங்கியபடி. ரோஹித் டாக்டர் ரூமிலிருந்து வந்தான். அவனது கோலத்தை கண்டதும் மாதங்கி தன்னை மறந்து,

'ரோஹித்.....' என்றாள் அதிர்வுடன். அவனது சட்டை முன்பக்கம் முழுவதும் ரத்தத்தால் தோய்ந்து போயிருந்தது. அவளது அழைப்பை கேட்டு நிமிர்ந்தான்.

'என்னாச்சு?' என அவன் முன்பாக வந்து நின்றவளது பதட்டத்தையும் பயத்தையும் பார்த்தவன் 'அதுக்குள்ளே விசயத்தை பரப்பிவிட்டாங்களா?' முணுமுணுத்தான்.

உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா Where stories live. Discover now