3

7.1K 216 5
                                    

Hi guys... happy to see you all in the next part... thanks for your continuous support... thanks for everything..

            மூவரும் வினியின் இல்லம் நோக்கி பயணிக்கிறார்கள்... வினியின் அம்மாவிற்கு விஜி மிகவும் செல்லம்... வீட்டிற்குள் நுழைந்தவுடன் அம்மா என்று கூவிக்கொண்டே அவர்களை சென்று அணைக்கிறாள்..

           வா டா வா டா விஜி கண்ணா எப்படி இருக்க? என்கிறார் வினியின் தாய்..

           நான் நல்லா இருக்கேன்.... நீங்க அப்பா கார்த்தி எப்படி இருக்கேன்க?

           நல்லா இருக்கோம் டா...

           இவர்கள் இருவரையும் புன்னகையுடன் வினியும் சுகன்யாவும் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்..

          ஹே சுகன்யா.. ஏன் அங்கயே நிக்கிற? உள்ளே வா... என்கிறார்

         ஹப்பா இப்பவாவது நான் உங்க கண்ணுக்கு தெரிஞ்சேனே... சந்தோஷம் தான்... என்று கூறிக்கொண்டே உள்ளே வருகிறாள் சுகன்யா...

         பேச்சில் தான் பொறாமை செயலில் இல்லை...அவள் முகத்தின் சிரிப்பு அதை வெளியிட்டது..

         சிறிது நேரம் பேசிவிட்டு உணவருந்த சென்றனர்... அனைத்துமே மூவருக்கும் பிடித்த உணவு என்பதால் ஒருவருக்கொருவர் சலிக்காமல் உணவருந்தினர்..

        இவர்கள் முடிக்கவும் வினியின் தம்பி கார்த்தி உள்ளே நுழைந்தான்..

        ஹாய் அக்காஸ் எப்படி இருக்கேன்க?

        சூப்பர் டா... நீ எப்படி இருக்க? என்றாள் சுகன்யா..

        அவனுடன் சிறிது நேரம் வம்பிலுத்துவிட்டு விஜியும் சுகன்யாவும் கிளம்பினர்..

        சுகன்யா விஜியை அவள் வீட்டில் டிராப் செய்துவிட்டு நேரமாகிவிட்டதால்... இன்னொரு நாள் வருகிறேன் என்று கூறிச்சென்றால்..

       விஜி கேட்டை திறந்து உள்ளே நுழைந்தால்... அவர்கள் வீட்டைச் சுற்றி தோட்டம்... பச்ச பசேல் என்று பார்ப்பதற்கே அழகான அமைப்பு... நடுவில் பாதை... தோட்டத்தின் ஒரு பகுதியில் அழகான ஊஞ்சல்... விஜியின் அடுத்த நெருங்கிய தோழி அவள்..

          விஜி தன் தோழியை பார்த்துவிட்டு முகத்தில் புன்னகையுடன் உள்ளே செல்கிறாள்..

          உள்ளே நுழையும் போதே ஹாலில் அப்பா அம்மா அண்ணா அமர்ந்து யாருடனோ உரையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.... நால்வரும் இவளை கவனிக்கவில்லை.. இவள் பூனை போல் நடந்து சென்று கிட்சனில்  வேளையாக இருக்கும் தன் அண்ணியின் கழுத்தை கட்டிக்கொண்டாள்...

           வா டா கண்ணா... இன்னைக்கு நாள் எப்படி போச்சு.. நல்லா ஆட்டம் போட்டையா? டயர்டா இருக்குமே... மேல ரூம்ல  போய் ரெஸ்ட் எடு.. நான் உனக்கு டீ போட்டு ரூம்க்கு கொண்டு வரேன்.. சரியா?

          ம்ம் நல்லா போச்சு அண்ணி... யாரு வந்துருக்காங்க? அப்படி ஒரு பேச்சு நாலு பேரும் நான் வந்தத கூட கவனிக்கலை..

         உனக்கு ஒரு வரன் வந்ததுல.. அத கொண்டு வந்த புரோக்கர் டா... ஓகே ஆகிடும்னு தோனுது பார்க்கலாம் டா..

        சரி அண்ணி நான் ரூம்க்கு போரேன்...

       ம்ம்  சரி டா...

       ரூம்க்கு வந்த விஜி உடை மாற்றி முகம் கழுவி விட்டு வரவும் அண்ணி டீயுடன் வரவும் சரியாக இருந்தது...

       அண்ணி கொண்டு வந்த டீயை கையில் வாங்கி அவர்களை அனுப்பிவிட்டு வந்து பால்கனியில் சேரில் அமர்ந்தாள்...

       அண்ணி கூறிய ஓகே ஆகிடும் என்ற வார்த்தையே திரும்ப திரும்ப ஒலித்தது.. அமைந்தா நாம் எதிர்ப்பார்த்த வாழ்க்கை.. விரும்பிய வாழ்க்கை.... நினைக்கவே சந்தோஷமாக இருந்தது..

        ஆனால் அவள் விரும்பும் வாழ்க்கை அவளுக்கு அமையுமா? நினைப்பதெல்லாம் உடனே கிடைத்துவிட்டாள் வாழ்க்கையில் சுவாரஸ்யம் ஏது?

        மாலில் பார்த்த அந்த கண்களுக்கு உரியவர் யார்? ஆணா பெண்ணா? அவர்கள் விஜியின் வாழ்வில் கொண்டுவரும் மாற்றம் என்ன? பொறுத்திருந்து பார்போம்...

          This part of my story ends here... thanks for reading.. i believe you enjoyed this part.. will see you in the next part.. bye take care

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now