48

3.9K 139 24
                                    


                  ஒரு வாரும் இரண்டு வாரமாகி.... கடைசியில் ஒரு மாதம் சென்றதும் இன்றுதான் சுமி அமேரிக்கா செல்கின்றாள்.... இந்த ஒரு மாதமும் வீடு கலகட்டியது..... எங்கும் சிரிப்பு சத்தம்... இந்த ஒரு மாதமாக விஷ்வாவும் சீக்கிரமே வீடு திரும்பினான்.... அனைவரும் ஏற்போட்டிற்கு கிளம்பிக்கொண்டிருந்தனர்....

                சுமி... பார்த்து மாப்பிள்ளை சொல்றத கேட்டு பத்திரமா இருக்கனும் டா... சரியா.. என்று அவளிற்கு அட்வைஸ் மழையை பொழிந்தார் லஷ்மி...

               அம்மா.. விடும்மா... அவ அங்க போய் படுச்சுருக்கா... அதெல்லாம் பார்த்துப்பா.. என்றாள் சந்தியா... திருமணத்திற்கு வந்தவள் நாளை தான் திரும்புகிறாள்...

              அத்தை நேரம் ஆச்சு... கிளம்பலாமா.?? என்று அங்கு வந்தான் கேஷவ்...

              ம்ம் சரி மாப்பிள்ளை...

              அத்தை ப்ளீஸ்... இந்த மாப்பிள்ளை பார்மாலிடீஸ் எல்லாம் வேணாம்.... கால் மீ கேஷவ்... என்றான் புன்னகைத்தபடி...

             ம்ம் சரி தம்பி... கிளம்பலாம்... என்று கூறி அனைவரும் கிளம்பினர்....
  
            சுமி பார்த்து போ... சரியா?? என்றான் சுசி ஏற்போட்டில் வைத்து...

           ம்ம்.... இருவரின் கண்களும் கலங்கியது.... சுசி அவளை தன்னோடு சேர்த்து அணைத்தான்..... சத்யனும் சிவாவும் அவர்களுடன் இணைந்தார்கள்.... ஹேய் நானு என்றாள் சந்தியா... சத்யன் அவளையும் அந்த அணைப்புக்குள் இணைத்தான்... அதை பார்த்த அனைவரின் கண்களும் நிறைந்தது.... சுந்தரம் லஷ்மியின் மனமும் நிறைந்தது....

             அப்பா... அப்பா... சித்தப்பா.. அப்பா எங்க??

             ரூம்ல இருப்பாங்க... ஏன்டா?? இங்க வா.. என்ட சொல்லு.. என்ன விஷயம்??

             சித்தப்பா.... இந்த வீட்ல யாருக்காவது பொருப்பு இருக்கா??

            ஏன்டா?? எங்க பொருப்புக்கு என்ன குறை??

           இன்னைக்கு என்ன நாள்??

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now