21

4K 154 17
                                    

                     
                        விஜி மருத்துவமனையில் சிவாவின் அருகில் அமர்ந்து யோசனையில் இருந்தாள்....

                        எல்லாரும் நம்மட்ட இருந்து எதோ மறைக்கிறாங்க... சுகி கூட அன்னைக்கு எதோ சொல்ல வந்தா... அப்புறம் பேச்ச மாத்திட்டா... என்று நினைத்தபடி அமர்ந்திருந்தாள்...

                    சிவா கண்விழித்து ஒரு வாரம் சென்றிருந்தது... ஆனால் யாரும் எதும் சொல்லவில்லை... இதை இன்னைக்கு கண்டுபிடிச்சே ஆகனும்... சிவாவும் பெட்ட விட்டு எந்திரிக்கவே மாட்றாரு... படுதுட்டேதான் இருக்காரு...

                  சுகி அன்னைக்கு டாக்டர்ட போய்ட்டு தான் அப்படி வந்தா... டாக்டர்டயே கேப்போம்... என்று எழுந்து டாக்டரிடம் சென்றாள்...

                  Excuse me doctor...

                  S. Come in

                 டாக்டர் நான்... சிவரஞ்சனோட wife...

                 ம்ம் தெரியுது மா.. சொல்லுங்க...

                 டாக்டர்... அவரோட ஹெல்த் கன்டிஷன் பத்தி எனக்கு தெரியனும் டாக்டர்.... ப்ளீஸ்...

                 நான் அன்னைக்கே உங்க குடும்பத்துல எல்லார்டயும் சொல்லிட்டேனே... யாரும் உங்கட்ட சொல்லலயா?

                 இல்லயே டாக்டர்... என்று கூறும் போதே அவள் கை நடுங்கியது... எதோ விபரீதம் என்று அவள் உள்மனது கூறியது...

                 நீ உன்வீட்ல உள்ளவங்கட்ட கேளுமா...

                 ப்ளீஸ் டாக்டர்... அவருக்கு என்ன? எனக்கு தெரியனும்... ப்ளீஸ் சொல்லுங்க... என்று அவள் கதற ஆரம்பிக்கும் போதே சுகன்யா உள்ளே நுழைந்தாள்....

                 ஓடி வந்து அவளை அணைத்தபடி அருகில் அமர்ந்து... இவட்ட பேச யாருக்கும் தைரியம் வரல டாக்டர்... அதான் சொல்லல.... நீங்களே சொல்லிடுங்க... என்றாள்...

               ம்ம் ஓகே... you have to b strong mrs.சிவரஞ்சன்....

                Mr.சிவரஞ்சனுக்கு நடந்த ஆக்சிடென்ட்ல அவரோடு முதுகு தன்டுல பலமான அடிபட்றுக்கு... அதனால அவரால எந்துச்சு நடக்க இனிமே முடியாது... அவருக்கு வயிருக்கு கீழே உள்ள பகுதி அனைத்தும் செயல் இழந்துடுச்சு....

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now