35

3.5K 129 17
                                    


                   அன்று மாலை விஜி ஹாலில் அமர்ந்திருந்த போது அவளுக்கு ஒரு புது நம்பரில் இருந்து கால் வந்தது... யாராக இருக்கும் என்று யோசனையோடு போனை எடுத்தாள்...

                  ஹலோ.. யாரு??

                  அம்மா.. என்னை தெரியுதுங்களா?? நான் தான் இஸ்திரி போடுறவன்... காலைல நம்பர் குடுத்தேங்கல்ல....

                  ஆமா..ஆமா சொல்லுங்க அண்ணா...

                  அம்மா.. அந்த பொண்ண பத்தி தெரிஞ்சா சொல்ல சொன்னேங்களே....

                  ஆமா அண்ணா.. எதும் விஷயங்களா?? என்றாள் பரபரப்பாக.. இவள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே அருகில் வந்தான் விஷ்வா.. அவனை அருகில் அமர்த்தி ஸ்பீக்கர் மோடில் போட்டாள்...

                 ஆமாங்கம்மா... நீங்க நேர்ல வர முடியுமா??? கொஞ்சம் சீக்கிரம் வாங்க மா..

                 ம்ம் இதோ.. பத்து நிமிஷத்துல அங்க இருப்போம்.. என்று கூறி இருவரும் உடனே புறப்பட்டனர்...

                 வாங்க மா.. வாங்கய்யா...

                என்ன சொல்லனும் அண்ணா???...

                அம்மா... அந்த பொண்ண நான் அன்னைக்கு பார்த்தேன்னு சொன்னேன்ல...

                ஆமாண்ணா..

                அன்னைக்கு அந்த பொண்ண ஒருத்தன் தன் கார்ல ஏத்தீட்டு போனான்மா... நீங்க அப்ப கேட்கும் போது எனக்கு நியாபகம் வரல... இப்ப அவன இங்க கொஞ்ச நேரம் முன்னாடி பார்த்தேன்... டக்குனு நியாபகம் வந்துச்சு.. நீங்க நேர்ல வந்தா அவன்ட விசாரிக்க வசதியா இருக்கும்னு வர சொன்னேன்மா..

                இப்ப அவன் எங்கய்யா.. என்றான் விஷ்வா அவசரமாக...

                அந்த பொண்ணோட வீட்டுக்குள்ள போய்ருக்கான்... இவ்ளோ நேரம் வெளிலதான் நின்னுட்டு இருந்தான்.. இப்பதான் அந்த அம்மா வந்துச்சு... உள்ள போய்ருக்கான்...

               ஓ.. சரிய்யா.. நாங்க பாத்துக்குறோம்... ரொம்ப நன்றிங்க என்று கூறிவிட்டு இருவரும் வேகமாக வீட்டை நோக்கி நடந்தனர்... விஷ்வா அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தந்தான்...

              இருவரும் ஜன்னல் அருகே நின்று வீட்டிற்குள்ளே எட்டிப்பார்த்தனர்...

               நான் தான் உன்ன இங்கல்லாம் வர வேண்டாம்னு சொல்லிருக்கேன்ல வேலு... அப்புறம் ஏன்டா வந்த...

               என்ன பண்ண.. உன்ன மனசு தேடுது.. என்று அவளிடம் இளித்தான்... அவளை அருகில் இழுத்தான்...

              ம்ச்.. என்ன டா.. கொஞ்ச நாள் தான் அந்த பொண்ணயும் முடிச்சாச்சு... இந்த அப்பனையும் போட்டு தள்ளிட்டா சொத்து நமக்குதான்... அப்புறம் எல்லாம் நம்ம ராஜியம்தான்.. என்று சிரித்தாள் அவள்...

             இதைக்கேட்ட விஜிக்கு தலை சுற்றியது.. அவளை விஷ்வா தாங்கி பிடித்தான்... விஜிமா கன்ட்ரோல் பண்ணுடா.. என்று தட்டிக்கொடுத்தான்.. இருவரும் அவர்களின் பேச்சை கவனிக்க ஆரம்பித்தனர்...

           ஹே.... மங்கா.. அவள இன்னும் முடிக்கல...

           இப்போதுதான் விஜிக்கு மூச்சு வந்தது...

            ஏய் என்னடா சொல்ற.. நான்தான் முடிக்க சொன்னேன்ல...

           இல்ல.. மங்கா.. அந்த பொண்ணு செமையா இருந்துச்சா.. நம்ம பசங்க ஆசபட்டாங்க... அதான்.. ஒரு வாரம் வச்சுருந்து பண்ணலாம்னு நினைச்சேன்...

           டேய் என்னடா சொல்ற... நேத்துதான் போலீஸ் விசாரிச்சாங்க... அதான் உன்ன வர வேண்டாம்னு சொன்னேன்.. நீ இப்படி சொல்ற... இப்ப அவள எங்க வச்சுருக்க??

                நம்ம குடவுன்லதான்... ஏன்??

                இன்னைக்கு முடிச்சுரு அவள... வச்சுருக்க வச்சுருக்க பிரச்சனைதான்... அந்த டீச்சர் வேற ஓவரா பேசுனா.... கண்டுகிண்டு பிடிச்சுறபோறா...

                அதல்லாம் ஒன்னும் பண்ணமுடியாது.. இன்னேரம் அவள முடிச்சுருப்பாங்க பசங்க... சொல்லிட்டுதான் வந்தேன்...

                அவன் சொல்லி முடிக்கவும் விஷ்வாவும் விஜியும் போலீஸுடன் உள்ளே நுழையவும் சரியாக இருந்தது...

                போலீஸ் இருவரையும் கைது செய்தனர்... விஜியும் விஷ்வாவும் மாலதி இருக்கும் இடம் நோக்கி பயணப்பட்டனர்... மாலதியின் நிலை என்ன?? விஜி அவளை உயிருடன் மீட்பாளா??
பொறுத்திருந்து பார்ப்போம்...

             

             

        

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now