49

4.2K 137 32
                                    


                 சுகி.. சுகி...

                இங்க இருக்கேன் விஜி...

                ஓகே டி... சீக்கிரம் வா... கிளம்பலாம்...

                ம்ம் இதோ வந்துட்டேன்.. நீ பாப்பா வ தூக்கிட்டு கீழ போ.. இதோ வந்துறேன்...

                ம்ம் சரிடி... வாடா செல்லம் அத்தைட்ட வாங்க.... என்று தொட்டிலில் படுத்திருந்த வியன்யாவை தூக்கினாள் விஜி... குழந்தை அவளை பார்த்து அழகாக சிரித்தது....

               சுகி பாத்ரூமில் இருந்தாள்... சுகி சீக்கிரம் வா.. நான் கீழ வெய்ட் பண்றேன்.. என்று கூறி சென்றாள் விஜி...

              அங்கு பாத்ரூமிற்குள்.. சுகியை சுவற்றோடு சேர்த்து நிற்கவைத்து இருந்தான் விஷ்வா...

            ஏங்க.. இது உங்களுக்கே நியாயமா இருக்கா... உங்களுக்கு ரொமான்ஸ் பண்றதுக்கு டைமேவா இல்ல... இப்ப விஜி பார்த்திருந்தா மானம் போய்ருக்கும்.... ஒழுங்கா நகறுங்க... ப்ளீஸ்...

           ஏன்டி.. உன்ட்ட ஒரே ஒரு கிஸ் தனடி கேட்டேன்... அதுக்கு ஓவரா பிகு பண்ற.... ஒரே ஒரே கிஸ்டி குட்டிமா.. என்ன பார்த்தா பாவமா இல்லயா?? என்று அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான்....

           சரி சரி ஒரே ஒரு கிஸ் தான் ஓகே வா??

          ம்ம் டபில் ஓகே.... என்று அவளை நெருங்கினான் அவன்...

          சுகி.. என்னடி இவ்ளோ நேரம்... அங்க பன்க்ஷனே முடிஞ்சுரும் வா... விஷ்வா அண்ணா.. இப்ப ரூம்க்கு வரும் போது நீங்க அங்க இல்லயே... இப்ப எப்படி வந்தேங்க.. என்று அவள் அவனை பார்த்து கேட்டு வைத்தாள்...

           அவளின் கேள்வியில் சுகியின் முகம் சிவந்தது... விஷ்வா அசடு வழிந்தபடி அங்க தான் டா இருந்தேன்... பால்கனியில் இருந்தேன்.. என்று சமாளித்து வைத்தான்....

          சரி சரி வாங்க கிளம்பலாம்... ரஞ்சன்.. ரஞ்சன் வாங்க... என்று அவனையும் அழைத்தபடி வெளியே சென்றாள்....

         மாமா.. மாமா... தூக்கு என்று விஷ்வாவிடம் வசந்தன் ஓடி வந்தான்.. அவனை கைகளில் தூக்கி காரை நோக்கி சென்றான்...

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now