17

4.3K 158 7
                                    

     Welcome u all to the another ride.... lets start... come and join with me fast😁

     டின்னர் ரெடி.. எல்லாரும் சாப்ட வாங்க... என்றாள் நிலா...

     விஷு நீயும் சாப்டு போடா... வா...

     ம்ம் இல்லக்கா நான் கிளம்புறேன்..

     உதை வாங்குவ.. சொல்லிட்டேன்.. நிலா நீ அவனுக்கும் பிலேட் எடுத்து வை மா..என்றார் சுந்திரம்...

    நீயும் இந்த வீட்டு பிள்ளை தான் டா... எங்களுக்கு இரண்டாவது மகன் நீ தான்... உனக்கு அப்புறம் தான் சிவாவே... ஏன் டா நீ மட்டும் ஒதுங்கியே போற... என்று கூறி அவனை சாப்பிட அழைத்து சென்றார் லஷ்மி...

  இதை பார்த்துக்கொண்டிருந்த நிலாவின் கண்கள் கலங்கின... எப்போதும் நினைப்பதை போல இன்றும் இந்த குடும்பம் தனக்கும் தம்பிக்கும் கடவுளுக்கு கொடுத்த வரம் என்று நினைத்து கடவுளுக்கு நன்றி கூறினாள்...

தன் மனைவியின் எண்ணவோட்டத்தை அறிந்த சத்யன் அவள் அருகில் வந்து கையை பிடித்து அழுத்தினான்... இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த சுமியும் சுசியும் அவர்களை சகஜமாக்க இருவரையும் கேலி செய்தனர்....

பின்பு நிலாவும் விஜியும் பரிமாற அனைவரும் அமர்ந்து உண்டனர்... விஷ்வாவை விழியனுப்பிவிட்டு எல்லாரும் ஹாலில் அமர்ந்தனர்...

ஏன் நிலா... விஷ்வாக்கும் நம்ம சிவா வயதுதான... அவனுக்கும் சீக்கிரும் ஒரு பொண்ண பாத்துருவோமா... அவனும் எவ்ளோ நாளுதான் வேண்டாம்னு சொல்லுவான்... நீ அவன்ட்ட பேசுமா... என்றார் சுந்தரம்...

நான் இத பத்தி பேசுனா மட்டும் அவன் கேக்க மாட்றான் மாமா... நாளைக்கு அவன் வரும் போது நீங்களே கேளுங்க... என்றாள்

ம்ம் சரி மா.. என்று கூறிவிட்டு அனைவரும் படுக்க சென்றனர்...

ஏன் ரஞ்சன்... அவனால நமக்கு ஆபத்து வருமா? எனக்கு என்னமோ பயமா இருக்கு....

அருகில் படுத்திருந்த தன் மனைவியை தன்கை வளைவிற்குள் கொண்டு வந்து அவளை கொஞ்சிய படி... ஒன்னும் ஆகாதுடா.. நான் இருக்கேன்ல... டோன்ட் ஓரி செல்லம்... என்றான்...

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now