12

5.6K 175 17
                                    

Hello guys.. welcome u all to my nxt part of the story...

அனைவரும் தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்...

நாளைக்கு மறுவீட்டுக்கு போனும்ல சிவா...

ஆமாப்பா... எத்தன மணிக்கு கிளம்பனும்...

பத்து மணிக்கு கிளம்பிடுங்க... அங்க இரண்டு நாள் இருந்துட்டு வாங்க....

ம்ம் சரிப்பா...

அம்மா சந்தியா போன் பண்ணாலா? என்றான் சத்யன்...

இல்லடா பண்ணல... நீ இப்ப நெட்கால் பண்ணுடா....

இருண்ணா... நான் பண்றேன்.. என்று தன் போனிலிருந்து அழைத்தான் சிவா...

அது வீடியோ கால் என்பதால்... அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்...

போனை எடுத்த சந்தியா... என்னடா புதுமாப்பள... அக்காக்கு கால் பண்ணிருக்க?? இந்த நேரம் நீ விஜிக்குல ரூட்விட்டுட்டு இருக்கனும் என்றாள் கேலியுடன்...

ஐயோ என் மானத்த வாங்காத... இரு அம்மாட்ட பேசு என்று போனை லஷ்மியிடம் கை மாற்றினான்... அருகில் முகம் சிவந்து அமர்ந்திருந்த மனைவியை பார்த்து கண்சிமிட்டி அவளின் தோளை சுற்றி கையை போட்டான்... இதைப் பார்த்த சத்யன்.. நிலா... சுமி.. சுசி... அனைவரும் கேலி செய்து சிரித்னர்....

அனைவரும் மாற்றி மாற்றி சந்தியாவிடமும் அவளின் இரண்டு வயது மகள் ராதாவுடனும் பேசிவிட்டு மனதே இல்லாமல் போனை வைத்தனர்....

பிறகு சுமியும் சுசியும் படிக்க செல்ல...நிலா நித்யனை படிக்க அழைத்து சென்றாள்... லஷ்மி இரவு உணவை கவனிக்க சென்றார்.... விஜி உடன் எழுந்ததற்கு அவளை இருக்க சொல்லிவிட்டு அவள் மட்டும் சென்றார்... சுந்தரம்... சத்யன்...சிவா மூவரும் இன்று கம்பேனியில் நடந்தவற்றை பற்றி ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.... விஜி கையில் சாலாவுடன் தன் அறைக்கு சென்றாள்...

அப்போது விஜியின் கல்லூரி தோழி பவித்ரா அவளை அழைத்தாள்... அவளின் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாததால் அவள் திருமணத்திற்கு வரவில்லை.... அவளும் கொஷிக்கும் கஸின்ஸ்...

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now