40

3.7K 133 42
                                    


                    மாலதியின் அருகில் அமர்நது சுசி கதறி அழுதான்.... எல்லாம் சில நொடிகள் தான்.... அவளின் கையில் அசைவு தெரிந்தது... ஆச்சர்யமாக நிமிர்ந்து பார்த்தான்... அவள் மெதுவாக கண்ணை திறக்க முயன்றுக்கொண்டிருந்தாள்... அவன் அவளின் விழிப்புக்காக காத்திருந்தான்...

                   மெதுவாக கண் திறந்தவள்... அருகில் அவனை கண்டவுடன் திகைத்தாள்... கண்கள் கலங்கியது.... அவன் கைகளுக்குள் இருந்த தன் கையை வேகமாக இழுத்தாள்.... டிரிப்ஸ் ஏற்றிக்கொண்டிருந்ததால் வலி உயிர் போனது.... சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தாள்... தான் எங்கே இருக்கிறோம் என்பதை அறியாதவள்.... சுசியை வில்லனாக பாவித்தாள்.. அவனிடம் தப்பிப்பதே அவளுடைய முதல் வேலையாக இருந்தது.... முதுவாக பெட்டில் இருந்து எழுந்து அமர முயற்சி செய்தாள்...

                அதுவரை திக்பிரம்மை பிடித்தவன் போல அவளை வெறித்தவன் அவள் அமர முயற்சி செய்வதை பார்த்து அருகில் வந்தான்... அவள் கண்களின் தென்பட்ட பயத்தில் அதே இடத்தில் நகராமல் நின்றான்...

              ஏன் நம்மை பார்த்து பயப்படுகிறாள்... என்று யோசித்தவன்... தன்னை அவளுக்கு யாரென்றே தெரியாதே.. என்ற நிதர்சனத்தை உணர்ந்து சென்று கதவை திறந்தான்.... அதற்காகவே காத்திருந்தவள் போல் விஜி ஓடி வந்தாள்.... ரூமிற்குள் நுழைந்தவள் மாலதியை இறுகி அணைத்தாள்... விஜியை அங்கு எதிர்பார்க்காத மாலதி  சந்தோஷத்தில் திக்குமுக்காடினாள்...

            நாட்கள் விரைந்தோடியது... மாலதிையை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டனர்... அனைவரிடமும் ஒட்டியவள்... ஆண்களிடம் மட்டும் ஒதுங்கினாள்... முக்கியமாக சுசியிடம் இருந்து... அவளின் பாராமுகத்தில் அவன் தவித்து போனான்... சுமியிடம் புலம்பினான்... ஆனால் அவனால் மாலதியிடம் நெருங்க மட்டும் முடியவில்லை..... குடும்பத்தில் அனைவரும் மாலதி விருப்பப்பட்டாள் உன் திருமணம் என்று சுசியிடம் குண்டை தூக்கி போட்டனர்... அவன் விதியை நொந்தபடி காலத்தை ஓட்டினான்...

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now