34

3.7K 136 26
                                    


                  விஷ்வா அவள் கூறியதை கேட்டுக்கொண்டிருந்தான்...

                  அண்ணா அவள் என்னை நம்பி போனாண்ணா... நான் அவளுக்கு நம்பிக்கை தந்ததும்தான் அவ கண்கள்ல ஒரு ஔி வந்தது.... அந்த ஒலிய நான் திரும்பி பார்க்கனும்ண்ணா... ப்ளீஸ்.. அவ எனக்கு வேணும்...

                  கூல்டவுன் விஜிமா... கண்டுபிடிச்சுடலாம்... டோன்ட் வொரி... நீ அந்த பொண்ணோட அட்ரஸ்ஸ நோட் பண்ணிட்டு வா.. நம்ம அங்க போய் விசாரிக்கலாம்.... என்றபடி கிளம்பினான்...

                 இருவரும் அந்த ஏரியா போலிஸ் ஸ்டேஷன் சென்று நடந்ததை கூறினர்... கம்பிளைன்ட் பதிவு செய்து அந்த பெற்றோரை அழைத்து வந்தனர்...

                நீங்க தான் மாலதியோட அப்பாவா?? என்றான் விஷ்வா

                ஆமா ஸார்...

                ஏன்யா... இரண்டு வாரமா பொண்ண காணும்னு தேட மாட்டேங்களா?? ஒரு கம்பிளைன்ட் இல்ல... என்னயா மனுஷன் நீ???

                ஸார்.. தேவையில்லாம பேசாதேங்க... அது நடத்தை சரியில்லை.. எவன் கூட போனாலோ... யாரு கண்டா??? அவள பெத்ததுக்கு நான் அசிங்கப்படுறேன்...

               உங்களுக்கு பிறந்ததுக்கு மாலதிதான் அசிங்கப்படனும்... என்னயா பேசுறேங்க... அவளப்பத்தி நீங்க புரிஞ்சுக்கிட்டது இவ்ளோதனா?? பொண்டாட்டி போன ஒரே மாசத்துல இன்னோருத்திய கல்யாணம் பண்ண நீங்கல்லாம் அவள பத்தி பேச கூடாது... அண்ணா.. இவங்கட்ட இனிமே மாலதிக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுனு கையெழுத்து வாங்கிட்டு அனுப்புங்க அண்ணா... என்று பொங்கி எழுந்தாள் விஜி..

              ரிலாக்ஸ் விஜி... கூல்டவுன்...

              என்னமா நீ ஓவரா பேசுற... எங்கள பத்தி சொல்ல நீ யாரு... என்று கோபமாக கேட்டாள் மாலதியின் சித்தி...

             நான் மனுஷி... உன்ன மாதிரி மிருகம் கிடையாது... அந்த சின்ன பொண்ணுட்ட இருந்து அப்பன பிருச்சயே... உனக்கெல்லாம் வெக்கமா இல்ல...

கடவுள் தந்த வரம்Où les histoires vivent. Découvrez maintenant