25

4.1K 156 38
                                    


                  சிவா விஜியை எண்ணி தவிக்க... அவனை பின்னிருந்து ஒரு கரம் கட்டிபிடித்தது....

                 எனக்கு தெரியும் ரஞ்சன்... உங்களால என்னவிட்டு இருக்க முடியாது.... அதான் கொஞ்சம் விளையாடுனேன்... நான் எங்கயும் போல.... லெட்டர் மட்டும் தான் எழுதுனேன்... அதும் நிலா அக்காவோட ஐடியாதான்... சூப்பரா வேலை செஞ்சது... எப்புடி நம்ம ஐடியா... தர்ஷு தர்ஷுனு கதறுனேங்களா... ஹாஹாஹா என்று சிரித்தாள்...

             இனிமே... எதாது டயலாக் பேசுங்க... அப்புறம் நிஜமாவே போய்டுவேன்...

             இல்ல இல்ல... இனிமே எதுமே பேசமாட்டேன்... என்று வாய் மேல் கை வைத்தான்....

             இருவரும் மனம் விட்டு சிரித்தனர்...

             ஒரு மாதம் சென்றுபிறகு...
ஒருநாள்...

               அண்ணி... அண்ணி.... அம்மா விஜி அண்ணி எங்க?? என்று கேட்டபடியே உள்ளே வந்தார்கள் சுசியும் சுமியும்...

               அவ ரூம்ல இருக்கா... என்ன ஆச்சு...

               இருங்க அண்ணிய கூட்டிட்டு வந்து சொல்றோம்...

                இல்ல இல்ல வேண்டாம்... நம்ம எல்லாரும் அங்க போலாம்.. சிவாக்கும் தெரியட்டும்.. என்று கூறியபடி அனைவரையும் மேலே அழைத்து சென்றார் லஷ்மி...
   
               விஜிமா.. சுமியும் சுசியும் உன்ட எதோ சொல்லனுமாம்....

               என்ன டா...

               அண்ணி... எங்க சீனியர் கிஷோர்னு ஒருத்தங்க அமேரிக்கால வொர்க் பண்றாங்க... அவங்கட்ட அண்ணாவ பத்தி சொன்னோம்... அவங்க அண்ணாவ கூட்டிட்டு அங்க வர சொல்றாங்க... அண்ணாக்கு அங்க டிரீட்மென்ட பண்ணா சரி ஆகிடுமாம்...

              என்ன டா சொல்ற சுசி... நிஜமாவா... என்று குடும்பமே மகிழ்ச்சியில் திளைத்தது...

              ஆமா அண்ணி... சுசி சொல்றது உண்மை தான்.... நானும் சுசியும் கூட அங்கயே டிரைனிங் எடுக்க பெர்மிஷன் வாங்கிட்டோம்.... நம்ம கிளம்புறதுதான் பாக்கி... என்றாள் குதூகலமாக...

              ஓ அப்ப... சத்யா... நீ நாலுபேருக்கும் பிளைட் டிக்கட் போட்டுறு... என்று சுந்தரம் கூறினார்...

              ம்ம் சரி அப்பா....

              விஜிமா.... நீ திங்க்ஸ் எல்லாம் எடுத்து பேக் பண்ணு... இங்க எடுத்த டிரீட்மென்ட் பைல் எல்லாம் மறக்காம எடுத்து வச்சுக்கோ டா... என்றபடி லஷ்மி கூறிச் சென்றாள்....

             சிவா இன்னதென்று புரியாத நிலையில் இருந்தான்... அவனால் மறுபடியும் நடக்க முடியுமா??? அவனுக்கு எல்லாம் சரியாகிடுமா??

            தர்ஷுமா.. இங்க வாயேன்...

            என்னங்க?? என்று கேட்டபடி அருகில் வந்தாள் அவனின் தர்ஷு..

            அவளின் இடுப்பில் மகம் புதைத்தான்... அவனுக்கு அவள் அருகாமை தேவைப்பட்டது... அவளும் அவன் தலையை கோதி காெடுத்தாள்...
சிறிதுநேரம் கழித்து அவளின் சேலையில் ஈரத்தை உணர்ந்து அதிர்ந்தாள்... ரஞ்சு என்று அவனை மென்மையாக அழைத்து.. அவன் முகத்தை நிமிர்த்தி அவன் கண்களை துடைத்தவள் முகத்தை பார்த்தான் அவள் கண்களும் கலங்கியிருந்தது...

            சிறிது நேரத்தில் அவர்களே அவர்களை தேற்றிக்கொண்டு எடுத்து வைக்க ஆரம்பித்தனர்...

           எல்லா வேலைகளும் விரைவாக நடந்தது... அவர்கள் கிளம்பும்முன் விஜியின் அப்பா அம்மா அவர்களை பார்க்க வந்திருந்தனர்...

           வாங்க மாமா... வாங்க அத்தை... எப்படி இருக்கேங்க???

           நல்லா இருக்கோம் மாப்ள... நீங்க எப்படி இருக்கேங்க??

           ம்ம் இருக்கேன் அத்தை... மாமா ஐ ஆம் ஸாரி... அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டதுக்கு... என்று அவரிடம் மன்னிப்பு கேட்டான்...

           இருக்கட்டும் மாப்ள பரவாயில்ல.... விடுங்க... சரி எப்ப பிளைட்??

            11 pmக்கு மாமா...

             ஓகே மாப்ள... நீங்க ரெடி ஆகுங்க.. நாங்க கீழ இருக்குறோம்... என்று கீழே சென்றனர்...

             இரவு 9 மணிக்கெல்லாம் அனைவரும் ஏற்போட்டுக்கு கிளம்பினர்...

             இரவு 11மணிக்கு நால்வரும் சிவாவின் விடியலை நோக்கி புறப்பட்டனர்... சிவாவிற்கு மட்டுமா அது விடியல் விஜிக்கும் தானே...
பயணம் தொடரும்...

          

    

         

             

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now