36

3.6K 131 19
                                    


                    டேய்... அவள போடு டா ஒரே போடா...

                   அண்ணே... நான் ஒரு தடவண்ணே...

                  இந்த ஒரு வராமா அத தன டா செஞ்ச... ஏற்கனவே அந்த பொண்ணு இரண்டு நாளா மயங்கிதான் கிடக்கு...

                  ஒருக்கண்ணே... இவள கொல்ல மனசே வரமாட்டேங்குது.... என்ன அட்டகாசமா இருக்கா??

                  போதும் போதும் வலிஞ்சது.. அண்ணன் வர்றதுக்குள்ளயும் முடிக்கனும்... சீக்கிரம் என்றபடியதே... மயங்கிக்கிடந்த மாலதியை நெருங்கினான் அவன்...

                அவன் அவளை நெருங்குவதற்கும் விஜியும் விஷ்வாவும் படையோடு வருவதற்கும் சரியாக இருந்தது...

                 இருவரையும் கைது செய்து... மாலதியை அள்ளிக்கொண்டு ஹாஸ்ப்பிட்டளுக்கு சென்றனர்... சுசியும் சுமியும் வேலை பார்த்த மருத்துவமனையிலேயே அவள் சேர்க்கப்பட்டாள்...

                ICUவில் அனுமதிக்கப்பட்டாள்.
டாக்டர்கள் கவலைக்கிடம் என்றனர்... மாலதியின் தந்தை பெண்ணை பார்க்க முடியாமல்... நடந்த எதையுமே நம்ப முடியாமல் பிரம்மை பிடித்தவர் போல் அமர்ந்திருந்தார்... விஜி மாலதியை விட்டு நகரவில்லை...

                விஜயதர்ஷினி ப்ளீஸ் கம் டு மை ரூம்.. என்று கூறி சென்றார் மருத்துவர்...

                 Sorry to say this vijaya dharshini... but her condition is critical... its a gang rape... she is in coma... அவங்க அந்த அதிர்ச்சில இருந்து வெளில வந்தாலும் அவங்க உடம்பும் மனதும் ரொம்ப காயப்பட்டு இருக்கு... அது குணமாகுறது கஷ்டம்... 24 மணி நேரமும் அவங்க அப்சர்வேஷன்ல இருக்கனும்...இட் இஸ் வெரி இம்பார்ட்டன்ட்... அந்த பொண்ணுக்கு சுமித்ரா அன்ட் சுசித்ரன டியூட்டி டாக்டரா போட்ருக்கேன்... அவங்கட்ட பக்கத்துல உக்கார்ந்து யாராவது பேசிட்டே இருங்க... அந்த பொண்ணோட ஆழ் மனசுல அது பதியனும்.... அவங்கள காப்பாத்துறது நீங்க அவங்க எண்ணங்கள தூண்டுறதுல தான் இருக்கு... ஆல் தி பெஸ்ட் என்று அனுப்பிவைத்தார் அவர்..

             அவள் ரூமைவிட்டு வெளியே வரவும் சிவாவிடம் இருந்து கால் வரவும் சரியாக இருந்தது... அவளிடம் இரண்டு நாட்களாக பேசாதவன் அவளின் குறலுக்காக ஆசையாக காத்திருந்தவன்..... அவளின் அழுகை சத்தத்தை கேட்டு திகைத்தான்...

              தர்ஸுமா.. என்ன டா என்ன ஆச்சு?? ஏன் அழுற.... தர்ஷு அழுறத நிறுத்து...என்னனு சொல்லு டா முதல்ல?? எங்க இருக்க?? உடம்பு முடிலயா?? என்ன ஆச்சு எதும் பிரச்சனையா?? கண்ணா... சொல்லுடா... ப்ளீஸ்...

               அவன் கேட்ட எந்த கேள்விக்கும் அவளிடம் இருந்து பதில் வராமல் போக... அவன் என்ன செய்வதென்று அறியாமல் திகைத்தான்... போனை கட் செய்தவன்... தன் தந்தைக்கு அழைத்தான்... அவரின் முலம் விஷயமறிந்தவன்... தான் இப்போது விஜியின் அருகில் இல்லாமல் போன தன் விதியை நினைத்து வருந்தினான்...

                இங்கு விஜி மருத்துவமனை என்றும் பாராமல் கதறி அழுதால்.... அவளை சமாதானப்படுத்த யாராலும் முடியவில்லை...

                 என்ன மன்னுச்சுடுங்கம்மா... என்னாலதான் என் பொண்ணுக்கு இந்த நிலைமை... என் பொண்ணுக்கு நீங்க ஒட்டா உறவா... நீங்க இவ்ளோ வருத்தப்படுறேங்க... ஆனா நான் கல்லு மாதிரி உக்காந்துருக்கேனே... என்று கூறியவுடன் விஜியின் கண்ணீர் நின்றது... அவள் அவரை நிமிர்ந்து தீப்பார்வை பார்த்தாள்...

              அவ என் தங்கச்சி சார்... நீங்க யார் சார்?? அம்மாவும் இல்லாம்... நீங்களும் அவள ஒதுக்கி... என்ன பாடு பட்டுருப்பா அந்த சின்ன பொண்ணு... அப்படி என்ன பாவம் சார் பண்ணா.... உங்களுக்கு மகளா பிறந்தது மட்டும் தான் அவ பண்ண பாவம்... வேண்டாம் சார்... உங்க சங்காத்தமே எங்களுக்கு வேணாம்... என் தங்கச்சிய நான் பார்த்துப்பேன்... இனிமே சொந்தம் கொண்டாட்டிட்டு இந்த பக்கம் வந்தேங்க நான் மனுஷியா இருக்க மாட்டேன்... டாக்டர் என்ன சொன்னார் தெரியுமா...  gang rape... 17 வயசு சின்ன பொண்ணு சார் அவ... அவளோட இந்த நிலைமைக்கு நீங்கதான் முழு காரணம்... ஜஸ்ட் கெட் லாஸ்ட் என்று வேடித்தாள் அவள்...

             அதை கேட்டவர்... அப்படியே சரிந்து விழுந்தார்... இன்னோரு வார்டில் அனுமதிக்கப்பட்டார் அவர்... இதை பார்த்தவள் இன்னும் திகைத்தாள்... நாம் பேசியது அதிகமோ என்று வருந்தினாள்...
 
                மாலதி பிழைப்பாளா?? அவள் தந்தையின் நிலை என்ன??
பொறுத்திருந்து பார்ப்போம்...

             
                 

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now