10

5.9K 189 14
                                    

Hello everyone.. happy to see u in this part of my story..

அதிகாலையிலேயே விஜிக்கு விழிப்பு தட்டியது... ஆனால் எழ முடியாமல் சிவாவின் கரம் அவளை வளைத்திருந்தது.... திரும்பி அவனை பார்த்தாள்... சிவா ஆழ்ந்த நித்திரையில் குழந்தை போல் உறங்கிக்கொண்டிருந்தான்... முன்தினம் நடந்தவற்றை நினைத்தாள்... வெட்கம் சூழ்ந்தது....
எழுவதற்காக அவன் கையை விலக்கினாள்... அவனிடம் அசைவு தென்பட்டது.... இன்னும் அவளை இறுக்கினான்... விடுங்க ரஞ்சன்... எல்லாரும் நமக்கு வெய்ட் பண்ணிட்டு இருப்பாங்க... போனும்...

சரி வா... ஏற்கனவே லேட் ஆச்சு சேர்ந்து குளிச்சு கிளம்பலாம்...

ஆசைய பாரு... விடுங்க நான் சீக்கிரம் போறேன்... நீங்க மெதுவா வாங்க....

அதெல்லாம் முடியாது... நீ நான் சொல்றத கேளு... என்று அடம்பிடித்தான்...

சரி சரி வாங்க... என்று எழுந்தாள்...

அவன் எழுவதற்குள் பாத்ரூமிற்குள் சென்று கதவை தாளிட்டாள்...

அவன் அவளை முறைத்துவிட்டு திரும்ப படுத்துவிட்டான்...

அவள் குளித்து கிளம்பி கீழே வரும்வரை அவன் எழவில்லை...

விஜி கீழே வருவதைப் பார்த்து ஹாலில் அமர்ந்திருந்த சுந்தரம்..மாணிக்கம்..விஜய்..சத்யன்.. அனைவரும் குட் மார்னிங் மா என்றனர்...

அனைவருக்கும் குட் மார்னிங் கூறிவிட்டு... கிட்சனிற்குள் சென்றாள்.. அங்கு லஷ்மி... நிர்மலா... நிலா... ஹரிணி... அனைவருக்கும் காபி கலந்து கொண்டிருந்தார்கள்...

லஷ்மி இவளை பார்த்ததும் தன் அருகில் நிறுத்திக்கொண்டார்...

நிர்மலா மகளை பார்த்த பார்வையில்... வெட்கத்துடன் மகள் தலைக்குனிந்தாள்... இதை கண்ட நிர்மலாவின் முகத்தில் அமைதி தோன்றியது... தாய்க்கு தெரியாத சூழலா?? மகளின் வாழ்வு தொடங்கிவிட்ட மகிழ்ச்சியுடன் அந்த தாய் நிம்மதியானாள்...

அத்தை சுமி.. சுசி எங்க? என்றாள் விஜி..

அவங்க இரண்டுபேரும் ஏழு மணிக்கு தான் எந்திரிப்பாங்க... சோம்பேறிங்க... என்றார் லஷ்மி..

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now