47

3.8K 150 43
                                    


                 மொத்த குடும்பமும் தோட்டத்தில் குழுமியிருந்தது....

                 அனைவருக்கும் அந்த வரனில் சம்பந்தமே.... லஷ்மி மட்டும் சிறிது யோசித்தார்... பின் விஜி எடுத்து கூறியதால் அவருக்கும் பிடித்துவிட்டது....

                 இவர்களிடம் இருந்து நல்ல செய்தி வந்ததும்... மாப்பிள்ளை வீட்டார் மும்மரமாக திருமண வேலையில் இறங்கினர்....

                 அடுத்த மாதமே திருமணம் நிச்சயமானது.... சுமியும் கேசவ்வும் கனவில் மிதந்தனர்....

                நாட்கள் விரைந்தோடியது.... விடிந்தால் திருமணம்.... அனைவரும் நிற்க நேரம் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தனர்... சுகி... இத அந்த ரூம்ல வை மா.... என்று லஷ்மி அவளிடம் ஒரு தாம்பளத்தட்டை கொடுத்தனுப்பினார்....

               ம்ம் சரிங்க அம்மா... என்று உள்ளே சென்றாள் அவள்...

                அவளை பின் தொடர்ந்த ஒரு வயதான பெண்மணி... அவளை ரூமைவிட்டு வெளியேற விடாமல் அவளை மேலும் கீழுமாக பார்த்தார்...

                என்னங்கம்மா... எதும் செய்யனுமா??

                ஏம்மா... நானும் அப்பதுல இருந்து பார்த்துட்டு இருக்கேன்... நீ விஷ்வா சம்சாரம் தன... உனக்கும் அந்த விஜிப்பிள்ளைக்கும் அடுத்தடுத்து தன கல்யாணம் ஆச்சு... விஜி கைல ஏழுமாத பையன் இருக்கான்.... நீ இன்னமும் சும்மாதான் இருக்க.... இருந்துட்டு போ.. நான் கவல படல... எங்க சுமி வாழ போற பொண்ணு அவ கல்யாண விஷயத்துல முன்னாடி முன்னாடி வந்து நக்காம இரு போதும்.... உன்ன மாறி அவளும் ஆகிட்டான்னா.... வேண்டாம் தாயி.... உன் வேலைய பார்த்துட்டு ஒதுங்கி இரு.... என்று விஷத்தை கக்கி விட்டு சென்றார் அந்த பெண்....

               சுகி அப்படியே இருந்த இடத்தில் ஸ்தம்பித்து நின்றாள்.... வெளியே இருந்து அவளை தேடி வந்த விஜி இவளை பார்த்ததும் அருகில் வந்தாள்.... ஹேய் சுகி... அத்தை உன்ன தேடுறாங்க டி.... பொண்ணோட அக்காவ கேக்குறாங்களாம் டி... அத்தை உன்னயும் சந்தியா அண்ணியையும் வர சொல்றாங்க... சீக்கிரம் வாடி.. என்று அவளை கையை பிடித்து இழுத்தாள்....

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now