18

4.1K 155 10
                                    

          முதியோர் இல்லத்துக்கு சென்ற சிவா... அங்கு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த முதியவரின் அருகில் சென்று அமர்ந்தான்....

       சிவா... என் மகன் வந்துடுவான்ல?

      சொல்லிட்டோம் ஐயா.. இப்ப வந்துடுவாங்க...

      என் பேத்திய பார்த்துட்டு என் உயிர் பிரியனும் பா.... என்று அவர் கூறிக்கொண்டிருக்கும் போதே அவர் மகன் குடும்பத்துடன் வந்து சேர்ந்தான்...

     அவரும் ஆசை தீர எல்லோரையும் பார்த்துவிட்டு கண்களை மூடினார்....

     அனைத்து பார்மாலிடீஸையும் முடித்துவிட்டு சிவா வீடு திரும்ப 1 மணி ஆகியது...

      முதியோர் இல்லத்தை விட்டு வெளியே வந்த சிவா தன் காரை நோக்கி சென்றான்... ரோட்டிற்கு மறுபக்கம் காரை பார்க் பண்ணியிருந்தான்... அந்த ரோட்டை அவன் கடக்கும் போது....எங்கிருந்தோ வந்த லாரி அவனை மோதி தூக்கி வீசியது....

   இதுதான் என்று உணரும் முன்னே தூக்கி வீசபட்டான்.... சுயநினைவை இழந்தான்...
    
  அங்கு வீட்டில் விஜி வாசலையே பார்த்தபடி ஹாலில் அமர்ந்திருந்தாள்...

    சத்யா... விஜி வாசலையே பார்த்துட்டு இருக்கா பா... நைட்டு சாப்ட கூட இல்ல.. கொஞ்சம் அவட்ட சொல்லுங்களேன்... என்றாள் நிலா...

    சரி வா... என்று எழுந்தான் சத்யன்...

    விஜி... விஜி... வாசலை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தவளை உலுக்கினான்...

    எதோ கெட்ட கனவிலிருந்து விடுபட்டவள் போல் பதறி எழுந்தாள் அவள்...ம்ம் மாமா.... என்ன மாமா?

   வா மா வந்து சாப்டு... எவ்ளோ நேரம் தான் இப்படி உக்காந்துருப்ப... சிவா வந்துடுவான்... நீ சாப்டலேனா அவன் திட்டுவான் மா.. எழுந்து வா...

   இல்ல மாமா... அவர் வரட்டும்.... எனக்கு என்னமோ பயமாவே இருக்கு... அவர் வீட்டுக்கு வந்தாதான் எனக்கு சாப்பாடு உள்ள இறங்கும்....

   அப்போது அங்கு வந்த சுமி சுசி சுந்தரம் லஷ்மி ஆகியோர் முகத்திலேயும் அவளை சாப்பிட அழைக்க வந்த செய்தியே இருந்தது...

   அனைவரும் எவ்வளவோ முயன்று பார்த்தும் விஜி சாப்பிட மறுத்துவிட்டாள்....

   எல்லாரும் ஹாலில் அமர்ந்து சிவாக்கு காத்திருக்க ஆரம்பித்தனர்....

   சிவாவின் செல்லுக்கு போன் செய்தால் தொடர்பு கிடைக்கவில்லை... சிறிது நேரத்தில் விஷ்வாவிடம் இருந்து கால் வந்தது.... அழைப்பை ஏற்ற சத்யன்...

    ஹலோ மாமா... சிவா எங்க?

    ஏன் விஷ்வா.. அவன் இல்லம் வரைக்கும் போய்ருக்கான்....

     ஓ மை காட்... அப்ப எனக்கு வந்த இன்பர்மேஷன் கரைக்ட் தான்.... நான் சிட்டி ஹாஸ்ப்பிடல் போரேன் மாமா.. நீங்க எல்லாரும் வந்துடுங்க...என்றான் பதட்டமாக...

    என்ன விஷ்வா... என்ன ஆச்சு... முதல்ல என்னனு சொல்லு... அவன் பதட்டமாக பேசவும் விஜி நிலாவின் கையை அழுத்தி பிடித்தாள்.... நிலா அவளுக்கு கையை வருடி தைரியம் கூறினாள்....

       மாமா... சிவா க்கு விபத்துனு எனக்கு தகவல் வந்தது... வேற ஒன்னும் எனக்குமே தெரில... நான் மாரி தான் போன் பண்ணி என்ன டைவர்ட பண்றானோனுதான் உங்களுக்கு கால் பண்ணேன்... இப்ப பேச நேரம் இல்ல... நீங்க கிளம்பி வாங்க... நான் வைக்கிறேன்... என்று கட் செய்தான்....

     விஷ்வா போனை வைத்ததும்... வீட்டினர் அனைவரும் சத்யனை சூழ்ந்தனர்....

     விஷ்வா என்னடா சொன்னான்.... சிவாக்கு என்ன? ஏன் இப்படி பேய் அறைந்தமாதிரி உக்காந்துருக்க என்று தன் மகனை உழுக்கினார் சுந்தரம்...

     அவர் உலுக்கியதில் சுய நினைவிற்கு வந்த சத்யன்... விஷ்வா கூறியவற்றை அனைவரிடமும் கூறினான்... அதை கேட்ட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.... விஜி கதறி அழுதாள்....

      இது அழுவதற்கு நேரம் அல்ல.. என்று அவளை தேற்றி அனைவரும் மருத்துவமனைக்கு புறப்பட்டனர்....

     சிவா பிழைப்பானா? விதி அவனை என்ன செய்தது?
பொறுத்திருந்து பார்ப்போம்....

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now