43

3.6K 143 33
                                    


                  மாலதியை கைகளில் ஏந்தியபடி மருத்துவமனைக்குள் வேகமாக வந்த சுசியை பார்த்து சுமி திகைத்தாள்... அவன் அருகில் ஓடி வந்தாள்....

                 டேய் என்னடா ஆச்சு?? ஏன் இப்படி இருக்கா அவ?? மாலதி... மாலதி... இங்க பாருடா... ப்ளீஸ் என்ன பாரேன்... என்று அவளிடம் கதறினாள் அந்த அன்பு தோழி...

                ஒரு வாரம் சென்றிருந்தது மாலதியை மருத்துவமனையில் சேர்த்து.... இன்று அவள் வீடு திரும்புகிறாள்....

              விஜி சிவா சுசி சுமி மட்டும் மருத்துவமனையில் இருந்தனர்... மற்றவர்கள் அவர்களின் வரவுக்காக வீட்டுல் காத்திருந்தனர்...

             அன்று நடந்தது இன்றும் விஜியை மிகவும் பாதித்தது....

             கல்யாண வீட்டில் இருந்தவளை சுமி அழைத்தாள்...

             யாருமா போன்ல?? என்றாள் நிலா..

             நம்ம சுமிதான் அக்கா... இப்ப அவளுக்கு டியூட்டில... எப்பயும் கூப்டமாட்டாளே?? என்றபடி போனை எடுத்து 'ஹலோ' என்று கூறியது தான் தாமதம்... அங்கு சுமியின் அழுகுரல் தான் அவளுக்கு பரிசாக கிடைத்தது...

            ஹேய் என்னமா ஆச்சு?? ஏன் அழுற.... யாருக்கு என்ன?? என்று பதறினாள் விஜி...

            அண்ணி... அண்ணி... நீங்க உடனே புறப்பட்டு வாங்க... மாலதி மயங்கிட்டா... அவ ICUல இருக்கா... எங்க சீனியர் உங்கள பார்க்கனும்னு சொல்றாங்க...

            விஜிக்கு சர்வமும் அடங்கியது... எதோ பெரிய ஆபத்து என்பதை போல் உள்மனம் பதறியது.... வேகமாக தன் அத்தையிடம் சென்றவள்... விஷயத்தை கூறி தானும் சிவாவும் கிளம்புவதாக கூறி புறப்பட்டாள்....

           விஜியும் சிவாவும் மருத்துவமனைக்கு சென்றபோது மாலதி கண்விழித்திருந்தாள்.... சுசி மாலதியைவிட்டு நகரவில்லை....  அவளை பார்த்த இருவருக்கும் போன அமைதி திரும்பியது.... சுமி இருவரையும் தன் சீனியரிடம் அழைத்து சென்றாள்...

               சுமித்ரா... யூ வெய்ட அவுடசைட்..

                எஸ் டாக்டர்...

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now