13

5K 180 7
                                    

       Hello everyone... my nxt part is here... thanx for ur supporting...

      மாலை நான்கு மணிக்கு பவித்ராவும் கௌஷிக்கும் விஜியின் வீட்டிற்கு வந்தனர்...

      ஹாலில் அமர்ந்திருந்த ஹரிணி அவர்களை வரவேற்று அமரவைத்து...  ரூமில் இருந்த விஜியை அழைத்தாள்...

     சிவா அப்போது தான் தூங்கி எழுந்தான் என்பதால் விஜியை போக சொல்லிவிட்டு தான் முகம் கழுவ சென்றான்...

     "ஹாய் பவி... ஹாய் கௌஷிக்... எப்படி இருக்கேங்க?"

    "நாங்க நல்லா இருக்கோம் நீ எப்படி இருக்க?"

    "ம்ம் சூப்பர்..."

    "அண்ணா எங்க டி?"

     "இதோ இப்போ வந்துடுவாங்க..."

     "விஜி... ஐ அம் சாரி....நான் அப்படி செய்திருக்க கூடாது... நல்லவேளை நீ வரல... அண்ணா தான் வந்தாங்க.... ரொம்ப சாரி விஜி...." என்று கூறிக்கொண்டிருக்கும் போதே.. விஜியின் குழப்பமான முகத்தை பார்த்து பேச்சை நிறுத்தினான்...

        "என்ன கௌஷிக்? என்ன சொல்ற? எனக்கு எதுவும் புரியல."

       அப்போது மாடியில் இருந்து இறங்கி வந்த சிவா.. கௌஷிக்கை அங்கே எதிர் பார்க்கவில்லை என்பது அவனின் அதிர்ந்த முகத்தை பார்த்த கௌஷிக்கிற்கு தெரிந்தது, நடந்தது எதுவும் விஜிக்கு தெரியாது என்பதை புரிந்து கொண்டான்..

      சிவா எதுவும் சொல்லாதே என்பதை போல் சைகை காண்பித்தான்.... அதை விஜி பார்த்துவிட்டு நெற்றியில் முடுச்சுடன் அமர்ந்திருந்தாள்...

     அதன்பிறகு.. கௌஷிக் அதை பற்றி பேசவே இல்லை... விஜி கேட்டதற்கும்... சிவாவும் கௌஷிக்கும் சேர்ந்து பேச்சை மாற்றிவிட்டார்கள்...

      பவித்ராவும் கெளஷிக்கும் மாலை டீ ஸ்னாக்ஸ் முடித்துவிட்டு சென்றனர்... அவர்கள் சென்ற மறுநிமடம்... சிவாவை முறைத்துவிட்டு விஜி படி ஏறினாள்...

      அவளை பார்த்த சிவா தலையில் கைவைத்தபடி அவளை பின் தொடர்ந்தான்...

      அறைக்குள் சென்ற விஜி பால்கனிக்கு சென்று தன் ஊஞ்சலில் அமர்ந்தாள்...

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now