37

3.6K 131 34
                                    


                  மாலதியின் தந்தைக்கு ஹார்ட் அடாக் என்றனர்... தன் இறுதி நொடிகளில் அவர் விஜியிடம் பேச ஆசைப்பட்டார்...

                 நான் பண்ணது தப்புதான்.. சாரிம்மா... மாலதிய நல்லா பார்த்துப்ப என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு... அதான் நான் போறேன்... என்று கூறி கண்மூடினார்...

                நாட்கள் விரைந்தோடியது.... மாலதி கண்விழிப்பதற்காக காத்திருப்பதுதான் அந்த குடும்பத்தால் செய்ய முடிந்தது... சுசியும் சுமியும் அவளை கண்ணும் கருத்துமாக காத்தனர்...

               சுசி.. நீ கொஞ்சம் இங்க இரு.. என்று வெளியே சென்றாள் சுமி..

               சீக்கிரம் கண்முழுச்சுக்கோ மாலுமா... நான் எவ்ளோ நாள்தான் காத்திருக்குறது... உன்ன எப்ப அந்த நிலைமைல பார்த்தேனோ.. அப்பயே முடிவு பண்ணிட்டேன்.. நீ தான் என் உலகம்னு... நீ எனக்கு வேணும்... நீ அனுபவிச்ச கஷ்டம்லாம் போதும்... இனிமே உன் வாழ்க்கைல சந்தோஷம் மட்டும்தான்... ப்ளீஸ் டா.. எந்துச்சு வா.. என்று அவளிடம் கூறிக்கொண்டிருந்தான்...

              ஏய் சுசி.. என்ற அலறை கேட்டு தன் கனவுலகத்தில் இருந்து திரும்பினான்... இப்ப நீ என்ன சொல்லிட்டு இருந்த... என்று கேட்டுக்கொண்டே வந்தாள் சுமி..

              என்ன சொன்னேன்.. ஒன்னும் இல்லயே.. என்று மழுப்பினான்....

             ஏய்... கொன்றுவேன்... நீ சொன்னத நான் கேட்டேன்.. மறியாதையா சொல்லு... நீ மாலதிய லவ் பண்றயா??

            ம்ம் ஆமா.. சுமி... அவள எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு... அவ முழுச்சா.. அவதான் என்னோட உலகம்.. அப்படி இல்லனா.. டாக்டர் தொழில சேவையா நடத்திட்டு போய்டுவேன்.. அவள தவிற வேற எதுவும் எனக்கு வேண்டாம் டி... என்றான் அவன்..

               அவனின் வார்த்தைகளில் அவளின் கண்கள் கலங்கியது.... அவனை இறுக அணைத்துக்கொண்டாள்... அவனுக்கும் அந்த அணைப்பு தேவைப்பட்டது... சிறிது நேரம் அவர்களை யாரும் கலைக்கவில்லை... சில நொடிகள் சென்றதும் இன்னோரு கரம் அவர்கள் வளைத்தது... புன்சிசரிப்புடன் சத்யன் அவர்களை அணைத்தபடி நின்றுகொண்டிருந்தான்...

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now