19

4K 170 10
                                    

             Welcome u all to the 19th part of the story...

            
              செய்தியை கேட்டவுடன்... மாணிக்கம்... நிர்மலா... விஜய்.. ஹரிணி நால்வரும் மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்...

            சிவா உடம்பில் ஒரு இடம் கூட பாக்கி இல்லாமல் கட்டுடன் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தான்...

            அங்கு விஜி மயங்கி கிடந்தாள்... அவளை நிலா தன் மடியில் தாங்கியிருந்தாள்...

            குடும்பத்தில் அனைவரும் யாருக்கு யார் தைரியம் சொல்வது என்று தெரியாமல் டாக்டரின் வருகைக்காக ICU கதவை வெறித்தபடி அமர்ந்திருந்தனர்...

           அவர்கள் நிலைமையை பார்த்த ஹரிணி... அவர்களை தேற்றும் பொருப்பை தன் கையில் எடுத்துக்கொண்டு விஜய்யை அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள்....

         நிர்மலா சென்று லஷ்மியின் அருகில் அமர்ந்து கையை தட்டிக்கொடுத்தாள்....

         மாணிக்கம் சென்று சுந்தரம் அருகில் அமர்ந்து தோளை அணைத்து ஆருதல் கூறினார்....

         விஜய்யும் ஹரிணியும் அனைவருக்கும் டீ வாங்கி வந்தனர்... ஹரிணி சென்று அனைவருக்கும் டீ குடுத்தாள்... குடிக்க மறுத்தவர்களை வர்பறுத்தி அருந்த வைத்தாள்...

      அவர்கள் அருந்தி முடிக்கவும் டாக்டர் ICUவில் இருந்து வெளியே வரவும் சரியாக இருந்தது... அவ்வளவு நேரம் சோர்ந்து அமர்ந்திருந்த விஜிக்கு எங்கிருந்துதான் அவ்வளவு சக்தி வந்ததோ... ஓடி சென்று மருத்துவரிடம் நின்றாள்...

    அவருக்கு ஒன்னும் இல்லயே டாக்டர்... எனக்கு பயமா இருக்கே... மாமா கேளுங்களேன்... அவருக்கு ஒன்னும் இல்லேல... ப்ளீஸ் யாராவது சொல்லுங்களேன்....

    நீ அமைதியா இரு டா.. என்று நிர்மலா அவளை பிடித்துக்கொண்டார்...

   Plz any two of u come to my room... i will explain about his condition... என்று அவர்கள் பக்கம் திரும்பி கூறிவிட்டு அவர் தன் அறைக்கு சென்றார்....

  மாமா... நானும் வரேன் மாமா... ப்ளீஸ்... என்று சுந்தரத்தை பார்த்து கெஞ்சினாள் விஜி...

  வா மா என்று கூறி அவளும் அவரும் டாக்டரின் அறைக்கு சென்றனர்...

  டாக்டர்... அவருக்கு ஒன்னும் இல்லயே...

   நீங்க அவரோட மிஸ்ஸஸ் தன... அவர் கிரிட்டிக்கல் ஸ்டேஞ் தான் மேடம்.....

  என்னது... என்ன சார் சொல்றேங்க... அவன் உயிருக்கு?? என்று பதறினார் சுந்தரம்....

  இப்ப எதும் சொல்ல முடியாது சார்... 24hrs டைம்க்குள்ள அவருக்கு நினைவு வரனும் அப்பதான் சொல்ல முடியும்... உடம்புல ஒரு இடம் பாக்கி இல்லாம அடிபற்றுக்கு... தலைல பயங்கற அடி... இப்பதிக்கு எங்க கைல ஒன்னும் இல்ல leave the burden to god.. he can only save him...

    விஜி திக்பிரம்மை பிடித்தவள் போல் அமர்ந்திருந்தாள்...

    விஜிமா விஜி எந்திரி டா... வா வெளில போலாம்... எல்லாரும் நமக்காக காத்துருப்பாங்க... என்று சுந்தரம் அவளை உலுக்கினார்....

   அவரை பார்த்து விழித்தவள்... மாமா அவங்கட்ட நம்ம என்ன சொல்லனும்... ரஞ்சன்க்கு ஒன்னும் ஆகாதுல... அவருக்கு எதும் ஆச்சு நான் உயிரோட இருக்க மாட்டேன்... என்று அரற்றிய அவளை கைத்தாங்களாக அழைத்து சென்று நிர்மலாவின் பொருப்பில் விட்டுவிட்டு டாக்டர் கூறியதை மற்றவர்களிடம் கூறினார்...

    அதை கேட்ட அனைவரும் திகைத்தனர்.... தன் மகனை நினைத்து லஷ்மி கதறி அழுதார்.... பிறகு தன்னை கட்டு படுத்திக்கொண்டு... கண்ணல் உயிரற்று கிடந்த தன் மறுமகளை தேற்ற சென்றார்...

    அதுவரை தாயின் கைச்சிறையில் இருந்த விஜி லஷ்மியை கட்டிக்கொண்டு கதறினாள்...

    அத்தை... அவர வர சொல்லுங்க அத்தை... எனக்கு பயமா இருக்கு... வர சொல்லுங்க...

    வருவான் டா.. அவன் வருவான்... நீ கொஞ்ச நேரம் தூங்கு... நீ காலைல எந்திரிக்கும்போது அவன் உன் பக்கத்துல இருப்பான்.... தூங்கு டா.. என்று கூறி அவளை தன் மடியில் சாய்த்துக்கொண்டார்....

My this part ends here.... if u like it plz do vote and comment..

  

  

       

        

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now