8

5.8K 197 11
                                    

              விஜி வினி சுகன்யா மூவரும் பேசிக்கொண்டிருந்தபோது விஜியின் போன் அழைத்தது...

              விஜி எடுத்து ஹலோ என்றாள்... எதிர்புறம் பரபரப்பாக பேசினார்கள்...

              மேடம் நீங்க யாருனு தெரில... இங்க இந்த போனோட ஓனர்க்கு accident ஆகிடுச்சு... அவர் போன்ல இந்த நம்பர sweet heart னு சேவ் பண்ணிருக்கார்... அவர இங்க மாதவன் ஹாஸ்பிடல்ல சேத்துருக்கோம்... நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க... என்று அழைப்பை துண்டித்தார்...

               இதை கேட்ட விஜி அதிர்ந்தாள்... யார் அது... இது ரஞ்சனோட number இல்லை... யாராக இருக்கும் என்று யோசித்தாள்...

               உடனே சிவாக்கு டயல் செய்தாள்... அவன் எடுத்து...ஹாய் டா தர்ஷுமா... என்ன பண்ற? என்றான்...

               ரஞ்சன்.. ஒரு முக்கியமான விஷயம்... என்று கூறி நடந்த அனைத்தையும் கூறினாள்...

              சிவா உடனே தான் சென்று பார்ப்பதாக கூறி புறப்பட்டான்...

            சிவா திருமணத்திற்கு வந்திருந்த தன் நண்பன் விஷ்வாவையும் உடன் அழைத்து வந்திருந்தான்...

           அங்கு ஹாஸ்ப்பிட்டல் சென்று பார்த்தால் அது ஒரு நாடகம்... விஜியை வரவழைப்பதற்காக ஸ்ரீராம் போட்டது என்று தெரியவந்தது...

           ஹாஸ்ப்பிட்டல் வாசலில் இருந்த கௌஷிக்... முதலில் சிவாவை பார்த்தவுடன் அதர்ந்தான்... பிறகு நடந்த அனைத்தையும் கூறினான்...

                   ---------------------------

         அன்று குடி போதையில் தான் தன் நண்பன் உலறுகிறான் என்று நினைத்தான் கௌஷிக்... அதனால் அதை அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை...

        ஆனால் ஸ்ரீராம் எப்படியாவது விஜியின் திருமணத்தை நிறுத்துவதில் குறியாக இருந்தான்... கௌஷிக் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை அவன் கேட்பதாக இல்லை....

        நண்பனின் குணத்தை அறிந்த கௌஷிக்.. அவன் வழியில் சென்று என்ன செய்கிறான் என்று பார்த்து விஜியை காப்போம் என்று முடிவெடுத்தான்...

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now