23

3.9K 157 26
                                    

          
                அடுத்த நாள் காலை வழக்கம்போல் விடிந்தது... கண்முழித்த சிவா... அப்போது தான் முதல் நாள் தான் செய்த பிழையை எண்ணி வருந்தினான்... விஜியை அருகில் தேடினான்... ஆனால் அவளை காணவில்லை... சரி கீழே இருப்பாள் என்றெண்ணி தன் போனில் அவளை அழைத்தான்... சுவிச் ஆப் என்று வந்தது... சரி சார்ஞ் இல்லாமல் இருக்கும்... வரட்டும் பார்க்கலாம் என்று எண்ணி படுத்திருந்தான்...

              சிறிது நேரம் சென்ற பிறகு... லஷ்மி வந்தாள்...

              அவனை பிரஷ் செய்ய வைத்தாள்...

              என்ன மா தர்ஷி எங்க?

              அவ காலைலயே எங்கயோ கிளம்பி போனா டா... நீ தூங்கிக்கிட்டு இருந்த உன்ட சொல்ல சொன்னா...

              ஓ... என்றவனின் மனம் சோர்ந்தது....

               சரி நீ ரெஸ்ட் எடு...  என்றுவிட்டு அவள் கீழே சென்றாள்...

                சிவாவின் மனதில் எதோ சரியில்லை என்று தோன்றிக்கொண்டே இருந்தது...

                அவன் தன் போனை எடுத்து அவளுக்கு கால் செய்தான்... சுட்ச் ஆப் என்றே வந்தது.... எங்க போய்ருப்பா... சொல்லிட்டு போலாம்ல... சீ கடுப்பாகுது.... இவ ஏன்தான் இப்படி பண்றாலோ... சரி அண்ணிட்ட கேக்கலாம்... என்று அவளை போனில் அழைத்தான்...

             இருங்க தம்பி.. மேல வரேன்.. என்று போனை வைத்தாள்...

             என்ன தம்பி...

             அண்ணி தர்ஷு எதாது உங்கட்ட சொல்லிட்டு போனாலா... எங்க போனா???

              இல்லயே தம்பி... எதும் சொல்லல... சரியா பேச கூட இல்ல... அத்தைட்ட மட்டும் தான் சொல்லிட்டு கிளம்புனா.. ஏன் தம்பி... என்ன ஆச்சு???

             ஒன்னும் இல்ல அண்ணி... அவ கிளம்பும் போது நான் தூங்கிட்டு இருந்தேன் போல... என்டயும் சொல்லாம கிளம்பிட்டா... அதான் கேட்டேன்...

             ஓ சரி தம்பி.. அவ வந்ததும் வர சொல்றேன்... என்று கூறி வெளியேறினாள்.....

              திரும்ப திரும்ப விஜிக்கு முயன்று பார்த்தான்... சுட்ச் ஆப் என்றே வந்தது... அவனுக்கு மண்டை வெடித்தது.... என்ன செய்யலாம்... ஒன்றும் செய்ய முடியாது தர்ஷு வர்ற வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான்... என்று கதவையே பார்த்துக்கொண்டிருந்தான்.... அப்போது அவன் அருகில் இருந்த மேஜையில் உள்ள பேப்பரை பார்த்து அதை கையில் எடுத்து பார்த்தான்... அது ஒரு கடிதம்...

என் உயிரே..

                என் வாழ்க்கையே நீ என்று வாழ்ந்து வந்தேன்.. உன் குடும்பத்தை என் குடும்பமாக ஏற்றேன்.. நாம் சந்தித்து இரண்டு மாதம் தான் ஆகிறது... அதற்குள் இந்த பிரிவா... உனக்காக எதுவும் செய்யும் நான் உன்னை பிரிந்து செல்ல மாட்டேனா...  சிறு வயதிலிருந்தே கூட்டுக்குடும்ப வாழ்க்கை நான் எதிர்பார்த்து ஆசையாக காத்திருந்தது... உன்னால் எனக்கு கிடைத்தது.... அதையும் தான்டி நீ எனக்கு கிடைத்தாய்... நீ என் வாழ்வின் வரமல்லவா... ஆனால் அதற்கும் ஒரு தடை வந்துவிட்டது... இந்த பிரிவு என் உடலைத்தான் உன்னை விட்டு பிரிக்கிறது...உயிரை அல்ல... இந்த வீட்டில் நான் இல்லாவிட்டாலும் உன்னை பார்த்துக்கொள்ள ஒரு குடும்பமே உள்ளது... அந்த தைரியத்தில் செல்கிறேன்.... மீண்டும் சந்தர்ப்பம் வாய்த்தால் சந்திப்போம்... நீ ஆசைப்பட்டபடியே உன் வாழ்வை விட்டு செல்கிறேன்... ஆனால் என் அம்மா வீட்டிற்கு அல்ல... உனக்கு தெரிந்த யார் வீட்டுக்கும் அல்ல... என்னை தேட வேண்டாம்... கண்களில் கண்ணீருடன் விடைபெறுகிறேன்...

                                      உங்கள் தர்ஷினி

என்று எழுதியிருந்தது...

                   அதை பார்த்தவன் அதிர்ந்தான்.... அந்த கடிதத்தையே வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தான்...
அடுத்து நடக்க போவது என்ன???
பொறுத்திருந்து பார்ப்போம்

             

  

     

கடவுள் தந்த வரம்Wo Geschichten leben. Entdecke jetzt