45

3.9K 147 30
                                    


                     அப்பா என்று விஜி சொன்ன ஒரு வார்த்தை அவனை வானிற்கு அழைத்து சென்றது..... தனக்கும் ஒரு பாப்பா வர போகிறது என்பதே அவனை வானில் பறக்க வைத்தது... தன் அருகில் படுத்திருந்த விஜியின் தலையை ஒரு கையால் வருடியபடி மற்றொரு கையால் அவளின் வயிற்றை தடவினான்.... மென்மையாக அவள் வயிற்றில் முத்தமிட்டு அவளை அணைத்தபடி படுத்தான்....

                 சுகி... வீட்டில் அனைவருக்கும் தெரியபடுத்திவிட்டதால்.. யாரும் அவர்களை தொல்லை செய்யவில்லை.....

                 அன்று விஜிக்கு வளைகாப்பு.... சிவா இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருந்தான்....

               சிவா... சிவா...

              என்ன அண்ணி??

             விஜி உன்ன மேல கூப்டுறா.. போய் அவள கூப்டுட்டு வா... என்று அவனை மேலே அனுப்பினாள் நிலா...

             தர்ஷுமா... என்ன டா... சீக்கிரம் வா... உன்ன எல்லாரும் கூப்டுறாங்க... என்று கண்ணாடி முன் அமர்ந்திருந்தவளை பின்னிருந்து தன்னோடு சேர்த்தணைத்தான்....

            ரஞ்சி... என்றாள் அவள் அழுகுரலில்....

           அவளின் அழுகுரலில் திகைத்தவன்... அவளை தன்புறம் திருப்பி அவளின் முகத்தை தன் இரு கைகளால் பற்றி.... அவள் முகம் நோக்கி.... என்னடா?? என்றான்...

             அந்த ஒரு வார்த்தைக்காகவே காத்திருந்தவள் போல் அவள் வெடித்தாள்.... ரஞ்சி... ரஞ்சி... நான் இன்னைக்கு அங்க அம்மா வீட்டுக்கு போய்டுவேன்ல.... உங்கள பார்க்காம எப்படி இருப்பேன்.... என்று தேம்பினாள்....

              அவன் எப்படி அவளை சமாதானம் படுத்துவான்... அவனும் ஒரு வாரமாகவே இதை நினைத்து உள்ளே கதறிக்கொண்டிருக்கிறானே.... இருந்தும் தன் மனைவி அழுவதை தாங்க முடியாமல் அவளை தேற்றினான்.... தர்ஷுமா... இங்க பாரு.... டெய்லி நான் அங்க வந்து உன்ன பார்த்துக்குறேன்..... உனக்கு எப்பலாம் பார்க்கனும்னு தோனுதோ..... அப்பெல்லாம் கால் பண்ணு வந்துறேன்... சரியா... இன்னைக்கு நமக்கு எவ்ளோ முக்கியமான நாள்... வாடா கீழ போலாம்... என்று அவளை தெளியவைத்து அழைத்து சென்றான்....

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now