38

3.5K 130 21
                                    


ஏய் கிட்ட வராத டா.. நான் அடிப்பேன்... வராத.. சொன்னா கேளு...

நீ அடிச்சாகூட நல்லாதான் இருக்கும்.. அடி டி..

டேய் போய்டு... வேணாம்...

உன் வாய்தான் வேணாம்னு சொல்லுது... ஆனா கண்ணு கிட்டவாடானு சொல்லுதே டி... என்று மயங்கியபடியே அவளை நெருங்கினான் கணேஷ்...

டேய் நோ... என்று அவனிடம் கெஞ்சிக்கொண்டிருந்தாள் வினி... இருவரும் தங்கள் வீட்டு ஹாலில் இருந்தனர்...

நீ வேண்டாம் வேண்டாம்னு சொன்னாதான் எனக்கு கிக் ஏறுது டி.. என்று அவளை பார்த்து கண்ணடித்தபடியே அவளின் இருபக்கமும் கையை வைத்து அவளை சுவற்றோடு பிடித்து நகர முடியாமல் செய்தான்...

டேய் கதவ பூட்டலடா... யாராவது வந்தா மானம் போய்டும்... ப்ளீஸ்...

இந்த நேரத்துல யார் வர போரா... நீ சும்மா இரு...

அடுத்து அவள் பேச வாய் திறந்தபோது அதை அவனின் உதடுகள் மூடியது... இருவரும் தங்கள் உலகத்திற்குள் சென்றனர் ....

வினி... நாங்க எதுமே பார்க்கல என்று கதவருகில் கேட்ட குறளில் இருவரும் சட்டென்று விலகினர்...

கணேஷ்... ஹிஹி என்று சிரித்தபடி ரூமிற்குள் சென்றான்..

வினி கதவை நோக்கி திரும்பினாள்.... அங்கே..விஜி தன் கையால் சுகியின் கண்ணை மூடியபடியும் சுகி விஜியின் கண்ணை மூடியபடியும் வாயிலை நோக்கி திரும்பி நின்றிருந்தனர்... அவர்கள் அருகில் சென்று இருவர் முதுகிலும் தன் கையால் ஒரு அடி வைத்தாள் வினி..

வாங்க டி பூஜை வேலை கரடீஸ்... என்றாள் சிரித்தபடி...

ஹிஹி... வினி நம்மல ஜாடையா திட்டுறா டி.... என்றாள் சுகி..

இல்ல டி ... டெரக்ட்டாதான் திட்டுறா.... என்று சிரித்தாள் விஜி....

ஹிஹி.. இப்ப என்ன??? நாங்க கிளம்புறோம்.. இங்க நடந்தத யார்ட்டயும் சொல்ல மாட்டோம்... என்ன உடனே திரும்பிட்டேங்கனு அத்தை கேட்டா என்ன டி சொல்ல சுகி.. என்று கேட்டாள் விஜி வினியை பார்த்து கண்சிமிட்டியபடி...

ஆமால்ல... நம்ம வேற இவள நம்பி.. ஈவினிங்தான் வருவோம்னு சொல்லிட்டோம்.. அம்மா கேட்டா நமக்கு பொய் வேற சொல்ல தெரியாது... நம்ம இரண்டுபேரும் ஹரிச்சந்திரிகளாச்சே... என்று தீவிரமாக யோசித்தாள் சுகி..

இவர்கள் வாயை மூடலேனா.. நம்ம மானம் போயிரும்.. என்று முடிவுபண்ண வினி... நான் நேத்து ரசகுலா பண்ணேன்.. யாருக்கு வேணும்?? என்று அவர்கள் பக்கம் திரும்பினாள்... அங்கு யாரும் இல்லாததை கண்டு குழம்பினாள்...

பாவம் அவளுக்கு எப்படி தெரியும்.. அவர்கள் இருவரும் ரசகுலா என்ற வார்த்தையை கேட்டதும் கிட்சனிற்குள் எப்போதோ சென்றுவிட்டனர் என்று...

மூவரும் ரசகுலாவை சுவைத்தபடி ஹாலில் அமர்ந்திருந்தனர்... கணேஷ் எதுவுமே நடக்காததை போல் வந்து வினியின் அருகில் அமர்ந்தான்... இருவரையும் பார்த்து எப்போது வந்தீர்கள் என்ற கேள்வியை வேறு கேட்டு வைத்தான்... அவனின் கேள்வியை கேட்டவர்கள் விஜியும் சுகியும் மேலிருந்து கீழ்வரை அவனை பார்த்தனர்... வினி தலையில் அடித்தாள்...

              நீ சும்மா இருந்தாவது அவங்க இரண்டு பேரும் சும்மா இருந்துருப்பாங்க... உன் வாயால நீ கெட்ட.. என்ஜாய் பண்ணு.. என்று சிரித்தாள் வினி...
   
            ஹிஹி... சஸ்டர்ஸ் ஐ அம் பாவம்... என்று அவர்களை பார்த்து பாவம் போல முழித்தான் அவன்...

            சரி சரி.. பொலச்சு போங்க... மன்னிச்சுட்டோம்... என்றனர் இருவரும் கோரசாக...

           அன்றய நாள் மகிழ்ச்சியாக சென்றது.... மதியம் மூன்று மணியளவில் விஜிக்கு போன் கால் வரும் வரை...

           விஜிக்கு அழைத்தது யார்?? நல்ல செய்தியா?? கெட்ட செய்தியா??
பொறுத்திருந்து பார்ப்போம்...

கடவுள் தந்த வரம்जहाँ कहानियाँ रहती हैं। अभी खोजें