41

3.7K 141 29
                                    


                    விஜி மயக்கம் தெளிந்து கண்விழித்த போது... அந்த அறை முழுவதும் இருட்டாக இருந்தது... மெல்ல தன் கண்ணை கசக்கிவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.... அவள் முழிப்பதற்க்காகவே காத்திருந்தது போல் அறையின் விளக்கு எறிந்தது... அதை கண்டவள் பிரம்மித்தாள்.... அது அவளின் அறை... விஜி சிவாவின் அறை... அந்த அறை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.... சுவரில் HAPPY BIRTHDAY MY ANGLE என்ற வாசகத்தை பார்த்தவுடன் தான் தனக்கு இன்னைக்கு பிறந்தநாள் என்பது அவளின் நியாபத்துக்கு வந்தது... பெட்டை விட்டு எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்... யாரும் அங்கு இல்லை... அப்போது அந்த அறையின் கதவு திறந்தது.... சிவா விரித்த கைகளுடன் விஜியை நோக்கி வந்தான்.... விஜி காதலுடன் ஓடி வந்து அவன் கைகளுக்குள் தஞ்சம் புகுந்தாள்... இவ்வளவு நாள் அவனை பார்க்காத தவிப்பு... எப்படி திடீரென்று வந்தான் என்ற நினைப்பு.... அவனின் அருகாமையை விரும்பிய மனம்....ஆசை தீர மட்டும் அவன் முகத்தை பற்றி முத்தமிட்டாள்....யார் யாரிடம் தஞ்சம் புகுந்தார்கள் என்று சொல்வதற்கு இல்லை.... முத்தமிட்டு களைத்த இருவரும் பால்கனியில் ஊஞ்சலில் சென்று அமர்ந்தனர்.... அதன் பிறகு தான் விஜிக்கு நிறைய விஷயம் நியாபத்துக்கு வந்தது... அவள் வாய் திறக்கும் முன் சிவா அவளைப்பார்த்து நீ எதை கேக்க போகிறாய் என்று எனக்கு தெரியும் என்று அவளிடம் திரும்பி நடந்தவற்றை கூற ஆரம்பித்தான்...

                மாலதி ஹாஸ்ப்பிட்டலில் அட்மிட் செய்து அன்று... சிவாவின் அழைப்பை ஏற்ற விஜி.. அழுகையையே பரிசாக தந்தாள்.... போன் மூலமாக அவளை தேற்ற முடியாத சிவா... தன் தந்தைக்கு அழைத்து விஷயத்தை அறிந்ததும் கிளம்ப முடிவு செய்தான்... ஆனால் வேலையின் காரணமாக அவனால் கிளம்ப முடியவில்லை... அதற்குள் இரண்டு மாதம் சென்றுவிட்டது... அனைத்து பிரச்சனையும் முடிவிற்கு வந்தது... அந்த நேரத்தில் தான் விஜய் அவனுக்கு கால் செய்து ஹரிணியின் வளைகாப்பை பற்றி கூறினான்... அவனுக்கும் இதை பயன்படுத்த தோன்றியது... அதன் படி....

கடவுள் தந்த வரம்Where stories live. Discover now