💕

25.8K 426 50
                                    

"நிவி.. உனக்கு வர்ற மாப்பிள்ளை எப்டி இருக்கணும்.."

"அம்மா அப்பா பார்க்கிற பையன் யாரா இருந்தாலும் சரிதான்.."

"போ நிவி.. நீ ரொம்ப boring.."

"அப்டியா.. சரி நீ சொல்லு.. உனக்கு வரப்போறவன் எப்டி இருக்கணும்.."

"சொல்றேன் கேளு.. ம்.. பர்ஸ்ட் பொண்ணுங்கள மதிக்கணும்.. காதல்னா அவ்ளோ பிடிக்கணும்.. பார்த்த உடனே அப்டியே காதல் பத்திக்கணும்.. அந்த கண்ண பார்க்க ஏங்க வைக்கணும்.. மழையில என்கூட நனையணும்.. மொட்டை மாடியில உட்கார்ந்து நிலாச்சோறு சாப்பிடணும்.. எனக்கு நிறைய ஸ்வீட் சர்ப்ரைஸ் தரணும்.. கவிதை எழுத தெரியணும்.. ம்.. எழுத தெரியலைனா கூட பரவாயில்லை.. ரசிக்க தெரிஞ்சா போதும்.. நான் பேசுறதெல்லாம் ரசிச்சிட்டே இருக்கணும்.. ரொம்ப.. ரொம்ம்ம்ம்ம்ப... ரொமாண்டிக்கா இருக்கணும்.."

"போதும் சக்தி.."

"இதுக்கே சலிச்சுக்கிற.. போடி நான் உன்னை மாதிரி லாம் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தேடி கண்டுபிடிச்சு லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கணும்.."

"சரிம்மா தாயே.. என்னை ஆளவிடு.."

***

நான் பேசுனதுலாம் என் மனசில ஓடிட்டு இருக்கு..

என் கண் முன்னால கொழுந்து விட்டு எரியுற இந்த நெருப்பு.. என் கல்யாணத்துக்காகனு எல்லாரும் நினைக்கிறாங்க.

இல்லை.. எனக்குள்ள துளிர்த்த அந்தக் காதல் மொட்டிலே கருகிட்டு இருக்கு..

இது யாருக்கும் தெரியாமலே போறது வலிக்குது.. நான் என் ஒட்டுமொத்த காதலையும் யார் மேல காட்டணும்னு ஆசைப்பட்டேனோ அவனுக்கு கூட தெரியாமலே புதைச்சிட்டேன்.

அப்பா அம்மா அக்கா எல்லோர் கண்ணிலயும் சந்தோஷம் மின்னுது. அவங்க சந்தோஷத்துக்காக என் கனவையே தியாகம் பண்ணுவேன்னு நான் கற்பனைகூட பண்ணதில்லை.

எனக்கு வரப்போற கணவன் எப்டி இருக்கணும்னு எவ்ளோ கனவு இருந்துச்சு.. எல்லாம் கருகிக் கொண்டிருக்கிறது அக்னி சாட்சியாக..

என் கழுத்தில் திருமாங்கல்யம் ஏறும் அந்த நொடியில் அப்பா அம்மாவின் முகத்தை பார்த்தேன். அத்தனை பெருமை.. அத்தனை சந்தோஷம்.. இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்..

என் கனவை தொலைத்து விட்டு புது வாழ்க்கையை தொடங்குகிறேன்.. இனி நான் திருமதி. சக்தி அர்ஜுன்..

எப்படி இருக்கப் போகிறது என் வாழ்க்கை..

அடியே.. அழகே..Where stories live. Discover now