5💕

8.9K 301 36
                                    

உதய்

யாருமறியா ரகசிய கனவது
சாளரக் கண்ணாடி வழி
நிலவொளி கசியும் இரவில்
அவளை வலிந்து இழுத்துச்
செல்கிறது கையொன்று
வனம் ஒன்றிற்குள்..
பயந்து நடுங்கியபடி
செல்கிறது அவள்
உடல் பலமற்று
சருகுகளில் கால்படும்
ஓசை மட்டுமே..
பறவைகள் மிரண்டு
ஒலி எழுப்புகிறது
விழிகளுக்கு எதும்
அகப்படவில்லை
வெண்ணிற ஒளி
கசியும் அடர்ந்த
மரங்களைத் தவிர..
மிரட்சியுடன் உடல்
செல்கிறது கையதின்
பாதையில்..
மயங்கிச் சரிந்திடுமளவு
உடல் பலவீனமாகிட..
விழிகள் கூசும்
வெளிச்சம் பரவ
கையின் பிடி
மெல்ல தளர்ந்திட
இருள் சூழ்கிறது
இருள் கலைக்க
விழிகள் திறந்திட
நிலவின் ஒளி
அறை நிறைத்திட..
வனம் இழுத்துப்போன
கையின் நினைவில்
நித்திரை கொள்கிறாள்..

கவிதையை படிச்சிட்டு சக்தி like போட்டுட்டு..

"உன் girl friend கண்ட கனவை கவிதைனு போடுறீங்களா.. Mr.Uday.."னு மெசேஜ் பண்றா.

கொஞ்ச நேரம் கழித்து..

"Ha.. ha.. எனக்கு girl friends லாம் கிடையாது.."னு உதய்கிட்ட இருந்து ரிப்ளை வருது.

"ஆஹான்.. நம்பிட்டேன்..😜"

"Hy.. its true.. எனக்கு பொண்ணுங்கள பிடிக்காது அம்மு.."

"அவ்.. அப்ப நான் என்ன பையன்னு நினைச்சா பேசிட்டு இருக்க..😮"னு சக்தி கேட்கிறா.

"எனக்கு அம்முன்ற பேர் பிடிக்கும்.. அப்புறம் உன் ப்ரொபைல் பார்க்கும் போது நீ typical attention seeking பொண்ணு மாதிரி தோணல..அதான் உன்கிட்ட பேசுறேன்.."னு உதய் சொல்றான்.

"அதென்ன.. typical attention seeking.."

"அடிக்கடி selfie போட்டு likes வாங்குறது.. likesக்காக எதாவது லூசுத்தனமா பண்றது அந்த மாதிரி.. நீ ப்ரொபைல் பிக் மாத்தியே almost one year ஆகுது.."

"சீக்கிரமே அந்தக் குட்டி பாப்பா போட்டோக்கு பதில் original pic வைச்சிட வேண்டியதான்..😜"

"😎😒😒 எனக்கு உன்னை பிடிக்காம போறதுல அப்டி என்ன ஆசை உனக்கு.."

"விளையாட்டுக்கு சொன்னேன்.."

"😃"

"Gud ni8 Uday.."

அடியே.. அழகே..Where stories live. Discover now