12💕

8.2K 309 31
                                    

அம்மு

எத்தனை கால
காத்திருப்போ
அறியேன்..
எந்த பிறவியின்
பயனோ
அறியேன்..
இந்த கணம்
உன் அன்பில்
கட்டுண்டு விட்டேன்
என மட்டும்
அறிவேன்..
மீளும் வழி
அறியேன்..
மீள வேண்டிய
அவசியமும்
இல்லாது போனது..

"ஏன் அம்மு இப்டி பண்ற.."னு உதய் மெசேஜ் பண்றான்.

சக்திக்கு அதை பார்த்ததும் என்ன ரிப்ளை பண்றதுனே தெரியலை.

தன் மனசுக்குள்ள கேட்கிற அந்தக் குரல் தான் நினைவுக்கு வருது.

"அம்மு.. என்னாச்சு.. ரிப்ளை பண்ணு.."னு திரும்பவும் உதய் மெசேஜ் பண்றான்.

மெசேஜ் சத்தம் கேட்டதும் தான் சக்தி.. இன்னும் ரிப்ளை பண்ணலைனு புரியுது.

"ஏன்.. என்ன பண்ணேன்.."னு சக்தி ரிப்ளை பண்றா.

"ஏன் காதல் கவிதை எழுதுற.. i hate it.."னு உதய் சொல்றான்.

"காதல் தப்பான விஷயமா.."

"இல்லை.. ஆனா இப்பலாம் யாரும் உண்மையா காதலிக்கிறது இல்ல.."

"அப்டி பொதுவா சொல்லிட முடியாது உதய்.."

"அம்மு.. லவ் பண்ணும் போது எல்லாரும் ரொம்ப உண்மையா இருக்கிற மாதிரி தெரியும்.. ஆனா வீட்டில பார்க்கிற பையனை கல்யாணம் பண்ணிட்டு போற பொண்ணுங்க தான் இங்க அதிகம்.."

"சரி.. இதெல்லாம் விடு.. நான் ஒரு லவ் ஸ்டோரி சொல்றேன்.. அதுக்கு பிறகு உனக்கு பொண்ணுங்க லவ் மேல உள்ள தப்பான opinion கொஞ்சமாவது மாறும்.."னு சக்தி சொல்றா.

"சரி சொல்லு.."

"படிப்புனா உயிர் அவங்களுக்கு.. ரொம்ப கஷ்டப்பட்டு காலேஜ் வரைக்கும் வந்துட்டாங்க.. ஒரு பொண்ணா அது அவங்களுக்கு அவ்ளோ சுலபமா இருந்திடலை..

காலேஜ் படிக்கும் போது அவங்க லவ் பண்றாங்க. வேற வேற சாதி.. இரண்டு வீட்டிலயும் எதிர்ப்பு..

கிட்டத்தட்ட ஊரையே எதிர்த்து இரண்டு பேரும் கல்யாணம் பண்றாங்க.

தங்களோட படிப்பு உதவியால இரண்டு பேரும் சேர்ந்து சின்னதா ஒரு கம்பெனி ஆரம்பிக்கிறாங்க.

அடியே.. அழகே..Where stories live. Discover now