8💕

8.6K 301 31
                                    


அர்ஜீன் கார்த்தி கிட்ட பேசிட்டு எழுந்து வீட்டுக்கு வந்து தன்னோட பழைய டைரி ஒன்னைத் தேடி எடுக்கிறான்.

என்னவளே அம்மு..

ஆதியும் அந்தமும்
கண்டறிய முடியா
நம் அன்பின்
நீட்சியென நகரும்
காலத்தின் வழியெங்கும்
நீயும் நானும்
நிறைந்திருக்கோம்..

அர்ஜீன் தான் எழுதின அந்தக் கவிதையை பார்க்கிறான். அவனோட நியாபகம் எல்லாம் பின்னோக்கி நகருது.

"டேய் யாருடா இந்த அம்மு.." என்ற தன் நண்பனின் கேள்விக்கு அர்ஜீன்.. "என் wife பேரு.."னு பதில் சொல்றான்.

"அடப்பாவி எனக்கு தெரியாம எப்படா கல்யாணம் பண்ண.."

"இனிமே தான் அவளை தேடிக் கண்டுபிடிச்சு கல்யாணம் பண்ணப்போறேன்.."

"நம்புற மாதிரி இல்லையே.."

"அப்ப நம்பாத.." என அலட்சியமாக பதிலளித்தான் அர்ஜீன்.

"டைரி முழுக்க கவிதை தானா.. சரி அம்முன்ற பேர்ல பொண்ணு கிடைக்கலைன்னா என்ன பண்ணுவ.."

"அம்முன்றது நான் அவளுக்கு வச்ச செல்லப்பேருடா.."

"ஓஹோ.. அப்டி.."

"அப்டியே தான்.."என அர்ஜீன் சிரித்தான்.

"நான் ஒன்னு பண்ணப்போறேன்.. ஆனா நீ என்னை எதும் சொல்லக்கூடாது.."

"என்ன பண்ணப்போற.."

"இந்தக் கவிதையை என் ஆள்கிட்ட காட்டி நான் எழுதுனதுனு சொல்லப்போறேன்.."

"இது என் ஆளுக்கு நான் எழுனது.. அவளுக்கு மட்டும் தான்.."

"சரி தான்.. போடா.. நானும் எழுதுறேன் கவிதை.. அன்பே.. நீ என் board.. நான் உன் சாக்பீஸ்.."

அதைக் கேட்டு அர்ஜீன் சிரிச்சிட்டே இருந்தது நினைவுக்கு வந்து.. அர்ஜீன் கண்ணில இருந்து கண்ணீர் வருது.

"எவ்ளோ சந்தோஷமா இருந்தோம்டா.. நான் இப்டி உன்னை பறிகொடுத்துட்டு இன்னும் உயிரோட வாழ வேண்டி இருக்கேடா.."னு அர்ஜீன் தனக்குள்ளே வருத்தப்படுறான்.

அடியே.. அழகே..Where stories live. Discover now