6 இனம் புரியாத ஒன்று...

1K 66 9
                                    

6 இனம்புரியாத ஒன்று...

வீட்டுக்கு வந்த மாமல்லன், குளித்து முடித்து கட்டிலில் சாய்ந்தான். அப்பொழுது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு கதவை திறந்தான். முகத்தில் புன்னகை அணிந்தபடி நின்றிருந்தான் பரஞ்சோதி. அதே புன்னகையுடன் உள்ளே நுழைந்தான் தனக்கு ஒன்றுமே தெரியாதது போல.

"நமக்கு டிக்கெட் புக் பண்ணிடட்டுமா?" என்றான்.

"டிக்கெட்டா? எதுக்கு?"

"என்ன மல்லா, எதுக்குன்னு கேக்குற? நம்ம ஃபைனலைஸ் பண்ண வேண்டிய டீல் எவ்வளவோ இருக்கே... மறந்துட்டியா?"

"ஒ... ம்ம்ம்..." என்று சற்று நேரம் யோசித்தவன்,

"அதையெல்லாம் அடுத்த வாரத்துக்கு போஸ்ட்போன்ட் பண்ணிடு. இல்லன்னா கேன்சல் பண்ணிடு" என்றான்.

"என்ன்ன்னனனது? கேன்சல் பண்றதா? இப்படி பேசறது மாமல்லனா? என்னை கொஞ்சம் கிள்ளு... இது கனவு இல்லைன்னு நான் தெரிஞ்சுக்கணும்"

"உன்னோட டிராமாவை நிறுத்துறியா?"

"எதுக்காக கேன்சல் பண்ணனும்னு கொஞ்சம் சொல்ல முடியுமா?"

"நாளைக்கு தர்காவுக்கு போகலாம்னு இருக்கேன்" என்றான் முகத்தில் எந்த உணர்வும் இன்றி.

"தர்காவுக்கா? எதுக்கு?"

"அம்மாவோட வேண்டுதல் ஒன்னு இருந்தது. அதை நான் மறந்துட்டேன். இப்போ அதை செய்யணும்னு நினைக்கிறேன்"

"என்ன திடீர்னு?"

"திடீர்னுன்னா என்ன சொல்றது? இதுக்கு முன்னாடி ஞாபகம் வரல. இப்ப ஞாபகம் வந்திருக்கு. அவ்வளவு தான்."

"பரவாயில்ல... பிசினஸுக்கு அப்பாற்பட்டு, வேற ஏதோ ஒன்னை பத்தி நீ யோசிக்கிறியே... அதுவரைக்கும் எனக்கு சந்தோஷம் தான். நம்ம எல்லா டீலையும் அடுத்த வாரத்துக்கு போஸ்ட் போண்ட் பண்ணிடுறேன்" என்று கூறிவிட்டு சென்றான் பரஞ்சோதி.

தனது அறையின் பால்கணியில் நின்று வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் மாமல்லன். அவனது புத்திக்கு எட்டாத ஏதோ ஒன்றை அவன் மனம் அலசி ஆய்ந்து கொண்டிருந்தது. அவனது வாழ்க்கையில் என்ன தான் நடக்கிறது? தர்காவுக்கு செல்ல வேண்டுமென்று, அவன் பரஞ்சோதியிடம் இன்று பொய் கூறியிருக்கிறான். இங்கு தங்க வேண்டும் என்பதற்காக அவன் சொன்ன சாக்கு அது. அவனை ஓயாமல் துரத்திக் கொண்டிருக்கும் விஷயத்தை முடிக்காமல் அங்கிருந்து செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை. அவன் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்தாக வேண்டும்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now