23 வேலைக்காரி

854 61 14
                                    

23 வேலைக்காரி

மல்லை முழுவதும் சாம்பிராணியின் மணம் கமழ்ந்து, அந்த காலை வேலையை ரம்யமாக்கியது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால், வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட்டுக் கொண்டிருந்தாள் இளந்தென்றல்.

அப்பொழுது, அழைப்பு மணியின் ஓசை கேட்டது. இசக்கி கடைத்தெருவுக்கு சென்று விட்டதால், அவள் சென்று கதவை திறந்தாள். தன் முன்னாள் நின்றிருந்த, காவி உடை அணிந்த, அறுபத்தி ஐந்து வயது மதிக்கத்தக்க பெண்மணியை பார்த்து குழப்பமடைந்தாள். தனக்கு முன்னால் *தூப காலுடன்* நின்றிருந்த இளந்தென்றலை ஏற இறங்கப் பார்த்தார் அந்த பெண்மணி.

"நீங்க யாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?" என்றாள் இளந்தென்றல்.

"நான் ஆசிரமத்தில் இருந்து வரேன்" என்ற அவரது குரல் திடமாய் ஒலித்தது.

அதைக் கேட்ட இளந்தென்றல், ஏதோ கடவுளையே நேரில் பார்த்தவள் போல் குதூகலம் அடைந்தாள்.

"ஆசிரமத்தில் இருந்து வரீங்களா?" என்று அவரது காலை தொட்டு ஆசி பெற்றாள்.

அதை சிறிதும் எதிர்பார்க்காத அந்த பெண்மணியின் முகத்தில் அதிர்ச்சி தெரிந்தது. ஆச்சரியத்துடன் புருவம் உயர்த்திய அவர்,

"நான் மல்லனை பாக்கணும்" என்றார்.

"ஓஹோ... நீங்க *அவரை* பார்க்க வந்திருக்கீங்களா?"

அவள், மாமல்லனை *அவர்* என்று உச்சரித்தது மேலும் அவருக்கு ஆச்சரியம் தந்தது.

"உள்ள வாங்க... நான் அவரை கூப்பிடுறேன். நீங்க உட்காருங்க" என்றாள் இளந்தென்றல்.

"மல்லன் வீட்ல இல்லையா?"

"அவரோட ரூம்ல இருக்காரு. உங்களுக்கு ஒரு விஷயம் சொல்றேன் கேளுங்க. அவரை முகத்தில் அடிச்ச மாதிரி பேர் சொல்லி எல்லாம் கூப்பிடாதீங்க. சார்னு மரியாதையா சொல்லுங்க. நீங்க வயசுல பெரியவங்க தான்... ஆனா அவரு ரொம்ப கோவக்காரர்... நீங்க இப்படி பேர் சொல்லி, மரியாதை இல்லாம கூப்பிடுறீங்கன்னு தெரிஞ்சா, உங்களுக்கு அவர் *டொனேஷன்* எதுவும் கொடுக்க மாட்டார். ஜாக்கிரதையா நடந்துக்குங்க" என்றாள் குரலை தாழ்த்தி ரகசியமாய்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Waar verhalen tot leven komen. Ontdek het nu