20 வரவில்லை...

801 60 7
                                    

20 வரவில்லை...

மதுரை மண்ணில் கால் வைத்தாள் இளந்தென்றல். ஆனால் அவளது மனமோ அவளிடம் இல்லை. விமானத்தில் ஏறி அமர்ந்ததில் இருந்தே, அவள் மாமலனை பற்றி தான் நினைத்துக் கொண்டிருந்தாள். அவளால் நம்பவே முடியவில்லை, அவள் இருப்பது மதுரையில் என்பதை. இன்னும் ஒரு மணி நேரத்தில், அவள், அவளுடைய அம்மாவிற்கு முன் இருக்கப் போகிறாள். ஒரு ஆட்டோவை அமர்த்திக் கொண்டு, கோதை அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை நோக்கி பயணமானாள்.

அந்த மிகப்பெரிய மருத்துவமனையின் வரவேற்பில் விசாரித்துவிட்டு, கோதைக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையை நோக்கி நடந்தாள். அப்பொழுது, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தவர்களின், உடன் வந்தவர்கள் தங்குவதற்காக ஒரு பொது அறை இருந்ததை கண்டாள். அங்கே மிகப்பெரிய கூட்டம் இருந்தது. சிலர் மற்றவருடன் பேசிக் கொண்டிருந்தார்கள். சிலர், தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த தொடரை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவளுடைய பாட்டி அங்கு இருக்கவில்லை.

பிறகு, வரவேற்பில் கூறிய அந்த அறையை நோக்கிச் சென்றாள். சகல வசதியும் நிறைந்த அந்த அறையில், கட்டிலில் படுத்துக் கொண்டு, தொலைக்காட்சியில் பழைய பாடலை பார்த்துக் கொண்டிருந்தார் வடிவாம்பாள் பாட்டி. அங்கு வந்த இளந்தென்றலை பார்த்து அவர் வியப்படைந்தார்.

"அடி என் காசி அம்மா...! நீ எப்படி இங்க வந்த?"

"அம்மாவை பார்க்க வந்தேன் பாட்டி. எனக்கு ஒரு வாரம் லீவு"

"நீ இங்க வந்துட்டியே... அப்படின்னா, உன் முதலாளியோட அம்மாவை யார் பாத்துக்குவா?"

"அவங்களை ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்காங்க. நான் அங்க சும்மா தான் இருந்தேன். அதனால தான், எங்க முதலாளி என்னை ஊருக்கு போயிட்டு வர சொன்னாரு"

"அவரை மாதிரி நல்ல மனுஷங்க இருக்கிறதால தான், இன்னும் நாட்டுல மழை பெய்யுது. எவ்வளவு பெரிய மனசு அவருக்கு...! அவர் ஆசைப்படறது எல்லாம் அவருக்கு கிடைக்கணும்..." என்று மனதார வாழ்த்தினார் பாட்டி.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now