10 நீ தான் எனக்கு எல்லாம்

939 58 6
                                    

10 நீதான் எனக்கு எல்லாம்

இளந்தென்றலுக்கு கிடைத்திருந்த வேலையைப் பற்றி தெரிந்த போது, முதலில் சற்று தயங்கினார் வடிவாம்பாள் பாட்டி. ஆனால், எப்படியோ போராடி அவரை சம்மதிக்க வைத்து விட்டாள் இளந்தென்றல். இதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. அடுக்கடுக்காய் பல காரணங்களை அடுக்கிய பிறகு தான், அவளுக்கு பாட்டியிடம் அனுமதி கிடைத்தது. இறுதியில், வேறு எந்த வழியும் இல்லாததால், அரைமனதாய் ஒப்புக்கொண்டார் பாட்டி. தன் மகளை எப்படியும் காப்பாற்றியாக வேண்டும் அவருக்கு. இது கோதையின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயமாக இல்லாமல் இருந்திருந்தால், அவர் நிச்சயம் ஒப்புக் கொண்டிருக்க மாட்டார். கட்டுப்பெட்டியான குடும்பத்தின் வழி வந்த அவர்கள், திருமணம் ஆகாத கன்னிப் பெண்ணை, வேலைக்காக வெளியூர் அனுப்பி வைப்பது என்பது நினைத்து பார்க்காத ஒன்று. பாட்டிக்கு திருப்தி அளித்த ஒரே விஷயம், இந்த வேலை வந்தது, பஞ்சாயத்து தலைவர் ரங்கநாதன் மூலமாக என்பது தான். அவர் பொறுப்பேற்றுக் கொண்டதால், சம்மதித்தார் பாட்டி என்று தான் கூற வேண்டும்.

ரங்கநாதனும் தான் கூறியது போலவே, கோதையின் அறுவை சிகிச்சைக்கு தேவையான பணத்தை முன்கூட்டியே மொத்தமாய் பெற்றுத் தந்தார். பாட்டியும், தென்றலும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள். கோதையின் அறுவை சிகிச்சைக்கு தேவையான முதல் கட்ட பணத்தையும் செலுத்தினார்கள். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவையான சிறுநீரகத்திற்காக காத்திருக்கும் படி அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். கோதையுடன் மருத்துவமனையிலேயே தங்கி அவரை கவனித்துக் கொண்டார் வடிவாம்பாள் பாட்டி.

.......

தனது துணிமணிகளை பெட்டியில் எடுத்து வைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட தயாராகி கொண்டிருந்தாள் தென்றல். அவளிடம் கொடுக்கப்பட்ட விமான டிக்கெட்டை பெருமையுடன் பார்த்தாள் அவள்.  தானும் கூட ஒரு நாள் விமானத்தில் செல்வோம் என்பதை அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை. ஒருபுறம் சந்தோஷம் இருந்தாலும், மறுபுறம் அவளுக்கு பதட்டமாகவும் இருந்தது. இதுவரை அவள் மதுரையை விட்டு வெளியே சென்றதே இல்லை. ஆனால் இப்பொழுது, தனக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாத ஒரு புதிய நகருக்கு செல்கிறாள். புதிய கலாச்சாரத்தை சேர்ந்த மக்களுடன் அவள் கலந்து பழகியாக வேண்டும். ஒரு வயதான நோயாளியை கவனித்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் அவளுக்கு மிகவும் அன்னியப் பட்ட விஷயங்கள். அவள் இந்த பழக்கமில்லாத விஷயங்களை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இல்லாவிட்டால், அவள் தனது அம்மாவை இழக்க நேரிடும். இந்த வேலையை செய்வதில் அவளுக்கு எந்த வருத்தமும் இல்லை. குறைந்தபட்சம், இப்படிப்பட்ட ஒரு வழியையாவது கடவுள் அவருக்கு காட்டினாரே...! தனக்கென அவள் பிரத்தியேகமாய் வைத்துக் கொண்டிருந்த மீனாட்சியம்மன் சிலையை தன் கையில் எடுத்துக் கொண்டாள்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Onde histórias criam vida. Descubra agora