7 பிடித்திருக்கிறது

1K 58 15
                                    

7 பிடித்திருக்கிறது

மாமல்லனும் பரஞ்சோதியும் வீடு வந்து சேர்ந்தார்கள். ஏதோ யோசித்த பரஞ்சோதி,

"உன்னோட டீல் முடிஞ்சுதா?" என்றான்.

"எந்த டீலை பத்தி கேக்குற?"

"கோவிலில் இருந்து தர்கா வரைக்கும் துரத்திகிட்டு இருக்கியே, அந்த டீலை பத்தி தான் கேட்கிறேன்" என்றான்.

"உன் இஷ்டத்துக்கு இல்லாததை எல்லாம் பில்டப் பண்ணாத"

"நீ அதை உண்மையா பில்டப் பண்ற வரைக்கும் என்னை காத்திருக்க சொல்றியா?"

"வாய மூடு பரா"

மாமல்லனின் தோள்களை பற்றி, தன்னை நோக்கி திருப்பிய பரஞ்சோதி,

"நான் இல்லாததை பில்டப் பண்றேன்னு என் முகத்தைப் பார்த்து சொல்லு. இதுக்கு அப்புறம் அதைப் பத்தி நான் உன்கிட்ட பேசல..." என்றான் உறுதியான குரலில்.

"நான் பேசிக்கிட்டு இருக்கிறது பரஞ்சோதியோட அப்படிங்கிறதை நான் மறந்துட்டேன்..."

"அது உன்னோட தப்பு இல்ல மல்லா. நீ உன்னையே மறந்து போறதை நான் கவனிச்சிகிட்டு தான் இருக்கேன்"

"நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி. உன்னை மாதிரி என்னை நல்லா புரிஞ்சுக்குற ஒரு நண்பன் கிடைச்சதுக்காக..."

"இப்பவாவது தங்கச்சியை பத்தி நான் தெரிஞ்சுக்கலாமா?"

அவன் கூறியது மாமல்லனின் முகத்திற்கு புன்னகையை அழைத்து வந்தது. அவன் தான் ஏற்கனவே கூறி இருந்தானே, உன் மனைவி தான் எனக்கு தங்கை என்று...! அந்த எண்ணமே அவனுக்கு மகிழ்ச்சியை தந்தது. பரஞ்சோதி தன்னை எளிதில் கையும் களவுமாய் பிடித்து விடக்கூடிய அளவிற்கு, அவ்வளவு வெளிப்படையாகவா இருக்கிறது அவனது நடவடிக்கை? அவன் முகத்திற்கு நேரில் தன் விரல்களை சொடுக்கி அவனை மீண்டும் பூமிக்கு அழைத்து வந்த பரஞ்சோதி,

"மறுபடியும் எங்க தொலைஞ்சு போயிட்ட?" என்றான்.

அவனிடம் ஆரம்பத்திலிருந்து ஒன்று விடாமல் அத்தனையும் கூறி முடித்தான் மாமல்லன். அவன் கூறிய கதை, திரைப்படம் போல் இருந்ததால், திகைப்பில் ஆழ்ந்தான் பரஞ்சோதி. இந்த முறை மாமல்லன் தன் விரல்களை சொடுக்கினான்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now