21 'வீடு', 'இல்லம்' ஆனது

845 58 9
                                    

21 'வீடு', 'இல்லம்' ஆனது

காது வலிக்கும் *கிரீச்* ஒலியுடன், காரை தன் வீட்டின் முன் நிறுத்தினான் மாமல்லன். இளந்தென்றல் இப்படி செய்வாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தான். ஒருவேளை அவள் உடல்நிலை சரியில்லாமல் இருக்குமோ? வேறு ஏதாவது பிரச்சனையில் மாட்டிக் கொண்டாளோ? அவளுக்கு சிறிது நேரம் கொடுக்க வேண்டியது அவசியமோ? ஒருவேளை அவளுக்கு அவனது உதவி தேவைப்படுகிறதோ? அவனால் எந்த முடிவுக்கு வர முடியவில்லை. 

சினம் கொண்ட சிங்கம் என, வீட்டினுள் நுழைந்தான். வீட்டினுள் நுழைந்த அவன், மிகவும் பழக்கப்பட்ட எதையோ உணர்ந்து அசையாமல் நின்றான். ஒரு வாரத்திற்கு முன்பு வரை, அவனது வீட்டில் உலா வந்த அதே வாசம்...! அவனது வீட்டை, இல்லமாய் மாற்றிய அதே வாசம்...! இங்கும் அங்கும் பார்த்தபடி நின்றவன், இறுதியாய் சமையலறையை நோக்கி ஓடினான்.

அங்கு, அவன் பார்க்க ஏங்கிக் கொண்டிருந்த காட்சி, அவன் கண் முன் விரிந்தது. முகத்தில் நிம்மதி தவழ நின்றான் மாமல்லன். எவ்வளவு முயன்ற போதிலும், அவனது கண்களை கலங்காமல் தடுக்க முடியவில்லை அவனால். தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு முகத்தை துடைத்துக் கொண்டான்.

அங்கு சமைத்துக் கொண்டிருந்த இளந்தென்றல், அவன் நிற்பதை கண்டாள். உடனடியாய் தன் முகத்தை திருப்பிக் கொண்டாள். ஏனோ, அவனது பலவீனமான முகத்தைப் பார்க்க அவளால் இயலவில்லை. அவன் தன்னை நோக்கி வருவதை உணர்ந்த அவள், அலமாரியில் இருந்து எதையோ எடுப்பது போல் பாசாங்கு செய்து அங்கிருந்து செல்ல முயன்றாள்.

அவளை வழிமறித்து நிறுத்தினான் மாமல்லன். அவன் முகத்தை உற்று நோக்கிய இளந்தென்றல், மீண்டும் அங்கிருந்து செல்ல முயன்றாள். ஆனால், அவன் மீண்டும் அவளை தடுத்தான். பெருமூச்சு விட்ட இளந்தென்றல்,

"உங்களுக்கு இப்ப என்ன வேணும்?" என்றாள்.

"உண்மை"

"எந்த உண்மை?"

"எதுக்காக நீ திரும்பி வந்த அப்படிங்கற உண்மை"

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now