27 அதிஷ்டம் அற்றவளா?

801 58 10
                                    

27 அதிஷ்டம் அற்றவளா?

அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தான் பரஞ்சோதி. அப்போது அவனது கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. அது, மருத்துவர் சாராவிடம் இருந்து வந்தது.

"கொஞ்சம் முக்கியமான விஷயம் பேசணும். வீட்டுக்கு வர முடியுமா?" என்றார் சாரா.

"இப்போ எனக்கு ரொம்ப முக்கியமான வேலை இருக்கு. அப்புறமா வரட்டுமா?"

"நான் சொல்லப் போற விஷயம், மாமல்லனை பத்தியதா இருந்தா கூட, வர முடியாதா?"

"மாமல்லனைப் பத்தியா? என்ன ஆச்சு அவனக்கு?" என்ற அவனது குரலில் பதட்டம் தெரிந்தது.

"அவனுக்கு ஒன்னும் இல்ல. ஆனா, இளந்தென்றலுக்கு தான்..."

"இளந்தென்றலா? அவங்களை பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்?"

"இன்னைக்கு மாமல்லன் அவளை என்னோட கிளினிக்கு கூட்டிகிட்டு வந்திருந்தான். அப்போ தான் அவளோட க்ரிட்டிக்கல் கண்டிஷனை பத்தி நான் தெரிஞ்சிகிட்டேன். அதைப் பத்தி மல்லன் கிட்ட சொல்லி, அவனை அப்செட் பண்ண வேண்டாம்னு நினைக்கிறேன். அதனால தான் உன்னை இங்க வர சொல்றேன்"

"நான் இன்னும் அரை மணி நேரத்தில் அங்கே இருப்பேன்"

அழைப்பை துண்டித்துவிட்டு, தனது கார் சாவியை எடுத்துக்கொண்டு விரைந்தான் பரஞ்ஜோதி.

மல்லை

இளந்தென்றலின் அறைக்கு அவளை அழைத்து வந்து, கட்டிலில் அமர வைத்துவிட்டு, அவளுக்கு உணவு கொண்டு வருமாறு இசக்கியிடம் கூறினான் மாமல்லன். அதை அவளுக்கு உண்ண கொடுத்துவிட்டு, அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை காத்திருந்து, அதற்குப் பிறகு அவள் சாப்பிட வேண்டிய மாத்திரைகளையும் வழங்கினான்.

"இப்போ வலி எப்படி இருக்கு?"

"எவ்வளவோ பரவாயில்லை..."

"இன்னைக்கு ராத்திரி, என்னை இங்க இருக்க விடு... நான் சோஃபாவில படுத்துக்குறேன். உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்னை நீ நம்பலாம்" தயக்கத்துடன் கூறினான்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Onde histórias criam vida. Descubra agora