19 அவள் வருவாள்

820 55 6
                                    

19 அவள் வருவாள்...!

தனது பழைய நினைவில் இருந்து வெளியே வந்தாள் இளந்தென்றல். அவளால் காதம்பரியையும், அவருடைய மகன் முன்னாவையும் மறக்கவே முடியவில்லை. ஏனென்றால், காதம்பரியை அவளுக்கு மிகவும் பிடிக்கும். காதம்பரி ஒரு நாள் நிச்சயம் வருவார், வந்து தான் கூறியபடி செய்வார் என்று அவள் மனதார நம்பினாள்.

{ காதம்பரியும், கோதையும் நெருங்கிய தோழிகள். திருமணத்திற்கு பிறகு, கோதை தனது கணவருடன் கிராமத்திற்கு சென்று விட்டார். இளந்தென்றல் வளர்ந்த பின், அவளுக்கு படிப்பில் இருந்த பிடிப்பை பார்த்து, அவளுடைய அப்பா, மீண்டும் மதுரைக்கே திரும்பி வர முடிவு செய்தார். அவளுடைய படிப்பு கெட்டுப் போவதை அவர் விரும்பவில்லை.

மதுரைக்கு திரும்பி வந்து விட்டபோதிலும், காதம்பரியை சந்திக்க ஒரு முறை கூட முயலவில்லை கோதை. அதற்கு, அவர்களுக்கு இடையில் இருந்த தகுதி வித்தியாசம் தான் காரணம். ஆனால் விதி அவர்களை சந்திக்க வைத்தது.

தன் வயதுக்கு மீறிய பொறுப்புடன் இருந்த இளந்தென்றலை காதம்பரிக்கு மிகவும் பிடித்து விட்டது. அவளை கோதையிடம் வாயார புகழ்ந்து தள்ளினார். அவர்களுக்கு இடையேயான நட்பு மேலும் ஆழமானது.

 கோதையின் குடும்பம் மதுரைக்கு வந்த சில மாதங்களிலேயே, தனது வியாபாரத்தை சென்னைக்கு மாற்ற முடிவு செய்தார் காதம்பரியின் கணவர். அவர்கள் சென்னைக்கு இடம்பெயர தயாரானார்கள். அப்பொழுது தான், இளந்தென்றல் தனக்கு மருமகளாக வரவேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படையாய் கூறினார் கதம்பரி. இளந்தென்றலின் கழுத்தில் தங்கச் சங்கிலியையும் அணிவித்து தான் கூறிவந்தது விளையாட்டல்ல என்பதையும் நிரூபித்தார். அந்த சம்பவம் தான், இளந்தென்றலின் மனதில் ஊன்றி, பெரிய விருட்சமாய் தழைத்தோங்கி நின்றது. ஆனால், காதம்பரி, தனது முன்னாவிடம் தன் விருப்பத்தை கூறாமலேயே இந்த உலகத்தை விட்டு சென்று விட்டார்.

நடப்பதெல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் என்று இளந்தென்றல் நம்புவது சரி தான். ஆனால், அவளுடைய கதைக்கான திரைக்கதை, ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது என்பது அவளுக்கு தெரியாது. அவளை சுற்றி நடப்பது எல்லாமே, அவள் யாருக்காக காத்திருக்கிறாளோ, அவனை நோக்கித் தான் அவளை அழைத்துச் செல்கிறது என்பதும் அவளுக்கு தெரியாது.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now