49 திருமதி மாமல்லன்

1.2K 60 21
                                    

49 திருமதி மாமல்லன்

திருமண நாள்

கல்யாண மண்டபம் வெகு பரபரப்பாய் காணப்பட்டது. வெகு குறுகிய கால அவகாசத்தில், பிரம்மாண்டமாய் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமணம் என்று அனைவரும் பேசிக் கொண்டார்கள். மேடைக்கு வெகு அருகில், ஒரு ஓரமாய் யாரும் தொந்தரவு செய்யாத வண்ணம் அமர வைக்கப்பட்டிருந்தார் கோதை. ஏற்பாடுகளை கவனித்தபடி இங்குமங்கும் ஓடிக் கொண்டிருந்தான் பரஞ்சோதி. அவனிடம் செய்ய வேண்டிய வேலைகளை கூறிக் கொண்டிருந்தார் அவனது அம்மா  சாரா.

வேலைகளுக்கு இடையிலும், தன் மகனுடைய கண்கள் ஒரு குறிப்பிட்ட நபரை பின்தொடர்ந்து சென்றதை சாரா கவனித்தார்... காவியா. அதைப்பற்றி அவனிடம் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தார். அப்பொழுது பரஞ்சோதியே அவரிடம் வந்தான்.

"அம்மா, உங்களுக்கு ஞாபகம் வர்ற மாதிரி இருக்கா?"

"என்ன ஞாபகம்?"

"இல்ல, நீங்களும் காதம்பரி ஆன்ட்டி மாதிரி, நான் சின்ன பையனா இருக்கும் போது, ஏதாவது ஒரு பொண்ணுக்கு செயினை போட்டு உங்களுக்கு மருமகளா வரணும்னு ஆசைப்பட்டு இருப்பீங்களோன்னு நினைச்சேன்..." என்றான் சிரித்தபடி.

தன் கைகளை கட்டிக்கொண்ட சாரா,

"நான் மதுரைக்கு வர்றது, இது தான் முதல் தடவை" என்றார்.

"ஓஓஓஓ..."

"நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன், பார. உனக்கு என்னோட ஃபிரண்டு வைஷாலியை ஞாபகம் இருக்கா?" என்றார் பொடி வைத்து.

"உங்க கூட எம்பிபிஎஸ் படிச்சாங்களே அவங்களா?"

"அவளே தான்... அவளோட பொண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு அவ ஆசைப்படுறா. அவ மகளும் ஒரு டாக்டர் தான்"

அதைக் கேட்டு அதிர்ச்சியான பரஞ்சோதி,

"நம்ம குடும்பத்துக்கு நீங்க ஒரு டாக்டரே போதும் மா... அந்தப் பொண்ணு வேற ஒரு குடும்பத்துக்கு போய் சர்வீஸ் பண்ணட்டும். எனக்கு சிம்பிளான பொண்ணு போதும்" என்றான், தன் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்த காவியாவை பார்த்தபடி.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now