17 வெறும் காகிதம் தானே?

815 61 11
                                    

17 வெறும் காகிதம் தானே?

அன்று, இளந்தென்றலின் அம்மாவுக்கு அறுவை சிகிச்சை என்பதால், அவள் மருத்துவமனைக்கு ஃபோன் செய்து, தன் பாட்டி வடிவம்பாளுடன் பேசினாள். பாட்டியின் குரல் மிகவும் உற்சாகமாய் ஒலித்தது.

"என் காசியம்மா... எப்படி டி இருக்க ராஜாத்தி?"

"நான் நல்லா இருக்கேன் பாட்டி. அம்மா எப்படி இருக்காங்க? அவங்களுடைய ஆபரேஷன் எப்படி நடந்தது?"

"அவளுக்கு என்னடி குறை? மகாராணி மாதிரி கவனிச்சிக்கிறாங்க அவளை..."

"நெஜமாவா பாட்டி?" என்றாள் ஆர்வமாய்.

"ஆமாம், டாக்டருங்க எல்லாம் அவ்வளவு அருமையானவங்க. உங்க அம்மாவுக்கு ஆபரேஷன் பண்ண டாக்டர், லண்டன்ல இருந்து வந்தவராம். அதுவும், உங்க அம்மாவுக்காகவே அவர் இங்க  வந்திருக்கிறதா நர்ஸ் பிள்ளைங்க  சொன்னாங்க. அது ஏன்னு உனக்கு தெரியுமா?"

"ஏன் பாட்டி?"

"நீ வேலை பார்த்துகிட்டு இருக்கிற வீட்டோட முதலாளி தான் இந்த ஏற்பாடெல்லாம் செஞ்சிருக்காராம்" என்று பாட்டி கூறியதை கேட்டவுடன் ஆடிப் போனாள் இளந்தென்றல்.

"உங்க அம்மாவுக்கு தேவையான எல்லாத்தையும் அவர் தான் கவனிச்சிக்கிறாரு. உங்க அம்மா ரொம்ப குடுத்து வச்சவ. இல்லன்னா அவளுக்கு இப்படிப்பட்ட ஒரு கவனிப்பு கிடைக்குமா? பக்கத்துல இருந்து, உங்க அம்மாவை பார்த்துக்க முடியலையேன்னு நீ வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்ல. உண்மையை சொல்லப் போனா, அவளுக்கு யாரோட உதவியுமே தேவையில்ல. இந்த ஆஸ்பத்திரி பிள்ளைங்க அவளை அப்படி கவனிச்சுக்கிறாங்க"

எதையுமே யோசிக்க முடியாதவளாய் கல்லாய் சமைந்து நின்றாள் இளந்தென்றல்.

"காசி அம்மா... "

"என்...ன பாட்டி...?"

"உன் முதலாளிக்கு நம்ம ரொம்ப கடன் பட்டிருக்கோம்.  அம்மாவை இழக்கிற வலி எவ்வளவு கொடுமையானதுன்னு அந்த பிள்ளைக்கு தெரிஞ்சிருக்கு. அந்தப் பிள்ளையையும், அவங்க அம்மாவையும் நல்லா கவனிச்சுக்க டா கண்ணு... அந்தப் பிள்ளை செய்ற உதவிக்கெல்லாம் நம்ம என்ன கைமாறு செய்யப் போறோம்னு தெரியல. அவருக்கு கொடுக்கிற அளவுக்கு நம்ம கிட்ட என்ன இருக்கு? அவருக்கு எது சந்தோஷத்தை தருதோ அதை செஞ்சு கொடு. ஏன்னா, நம்மள மாதிரி ஏழைங்க கற்பனை கூட பண்ணி பார்க்க முடியாத அளவுக்கு வசதியை உங்க அம்மாவுக்கு அவர் செஞ்சு கொடுத்திருக்காரு"

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now