24 பாட்டிக்கு எப்படி தெரியும்?

796 60 13
                                    

24 பாட்டிக்கு எப்படி தெரியும்?

அன்று முழுவதும் இளந்தென்றலை கவனித்தபடி இருந்தார் அன்னபூரணி. அவளோ, தான் உண்மையிலேயே வேலைக்காரி தான் என்பதை நிரூபிப்பதற்காக படாத பாடு பட்டு கொண்டிருந்தாள். அதை தானும் நம்பி விட்டதாய் காட்டிக்கொண்டார்  அன்னபூரணி. தேவைப்பட்டாலே ஒழிய, அவர் அவளிடம் பேசவில்லை. அதன் பிறகு, அவர் தன்னிடம் ஒன்றும் கேட்காததால், இளந்தென்றலும் நிம்மதி அடைந்தாள். அவரது மிடுக்கான சுபாவம், இளந்தென்றலின் வயிற்றில் புளியை கரைத்தது.

அப்பொழுது சமையலறைக்கு வந்தார் அன்னபூரணி. அவரைப் பார்த்த இளந்தென்றல் பதட்டமானாள். இவர் எதற்காக இங்கு வந்திருக்கிறார்? ஏதாவது கேட்கப் போகிறாரோ?

"எனக்கு தேவையானதை நானே சமைச்சுக்கிறேன்" என்றார் அன்னபூரணி.

"நான் உங்களுக்கு சமைச்சு கொடுக்கிறேன் பாட்டி" என்றாள் இளந்தென்றல் தயங்கியபடி.

"என்னோட உணவு பழக்கத்தை பத்தி உனக்கு என்ன தெரியும்?"

அதைப் பற்றி ஒன்றும் தெரியாத இளந்தென்றல், அமைதியாய் நின்றாள்.

"நான் சாப்பிடற மாதிரி சமைக்க உன்னால முடியாது" என்றார் உறுதியான குரலில்.

"நீங்க எப்படி சாப்பிடுவீங்கன்னு  சொன்னா, நான் முயற்சி பண்ணி பார்க்கிறேன் பாட்டி"

"நான் என் சாப்பாட்டில், வெங்காயம், பூண்டு கலந்துக்க மாட்டேன்... குளிர்ச்சியான காய்கறிகள் சேர்த்துக்க மாட்டேன்... புளிப்பு, காரம், கிடையாது... அரை உப்பு தான் சேர்த்துக்குவேன். எண்ணெய் கூடவே கூடாது..."

இளந்தென்றலுக்கு தலைசுற்றியது. இப்படி கூட சமைக்க முடியும் என்று அவள் இதற்கு முன் கேட்டதே இல்லை. ஆனால், ஏன் முயற்சித்துப் பார்க்கக் கூடாது என்று தோன்றியது அவளுக்கு. அவளை ஏளனமாய் பார்த்தார் அன்னபூரணி.

"உன்னால சமைக்க முடியும்ன்னு, இன்னமும் நீ நம்புறியா?"  என்றார் எகத்தாளம் கொப்பளிக்க.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now